ஏற்கனவே சாதா காற்றில் பறக்கும் சருகு போலதான் இருக்கிறார் த்ரிஷா. இருந்தும் இந்தியில் நடிப்பதால் யோகா, உடல்பயிற்சி என்று உடம்பை மேலும் இளைக்க வைத்திருக்கிறார். பாலிவுட் ரசிகர்களுக்கு சைஸ் ஸீரோ உடம்புதான் பிடிக்கும் என்பதால் இந்த கடும் இளைப்பு.
த்ரிஷா நிலையே இப்படியென்றால் லட்சுமிராயின் நிலை? கேள்வியே வேண்டாம், பல பத்து கிலோக்கள் அவர் குறைத்தாக வேண்டும்.
இந்திப் படங்களில் நடிப்பதற்காக மும்பையில் வீடு வாங்கியவர் அப்படியே உடல் இளைப்பதற்கான வேலைகளையும் தொடங்கியிருக்கிறார். தமிழில் காஞ்சனா படத்தை முடித்தால் வேறு கமிட்டெண்ட்கள் எதுவும் லட்சுமிராய்க்கு இல்லை. இந்தி ஒன்றுதான் அவரது ஒரே குறிக்கோள்.
சீக்கிரம் போட்டோசெஷன் நடத்தி பாலிவுட் நட்சத்திரங்களை கலங்கடிக்கப் போகிறாராம்.
அப்படியே எங்களையும் கொஞ்சம் கலங்கடிங்க மேடம்.
Wednesday, June 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)