Pages

Thursday, June 10, 2010

அப்பாவி திரைபடத்திற்கு பாராட்டு

0 comments
 
அப்பாவி படத்தில் பஞ்ச பூதங்கள் பழிவாங்கும் காட்சியை வைத்துள்ளோம் என்றார் இயக்குனர் ரகுராஜ். கௌதம், சுகானி நடிக்கும் படம் அப்பாவி. படத்தை இயக்கும் ரகுராஜ் கூறியது: இந்தியராக இருக்கும் எல்லாருக்கும் நம் நாட்டை பற்றிய சில கேள்விகள் இருக்கும். நம் எல்லாருக்குமே இருக்கும் ஒரு கேள்விக்கு படத்தில் பதில் சொல்லியிருக்கிறேன். இது நாட்டுப்பற்று பற்றிய படம் அல்ல. இதில் நீதி சொல்லவில்லை. கமர்சியல் படத்தில் கருத்து சொல்லியிருக்கிறேன். வழக்கமாக படங்களில் பழிவாங்கும் காட்சிகளில் அரிவாள், துப்பாக்கியை காட்டியிருப்பார்கள். இதில் பஞ்ச பூதங்களைக் கொண்டு வில்லனை பழிவாங்குமாறு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் பாராட்டி, யூ ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இம்மாதம் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம், என்று கூறினார்.

Leave a Reply