புதுமுகங்கள் பூஷன், வித்யா நாயகன், நாயகியாக நடிக்க ஆறாவது வனம் என்ற பெயரில் படம் தயா ராகியுள்ளது. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி புவனேஷ் இயக்கியுள்ளார்.
இதில் ஒரு முத்தக்காட்சியில் நடிக்க வித்யாவை வற்புறுத்தினர். வித்யாவின் தாய் மாமன் போஸ் வெங்கட்டை கொல்ல அவரது காதலன் வெறியோடு வருகிறான். நாயகனின் கொலை வெறியை தணிக்கவும் போஸ் வெங்கட்டை காப்பாற்றவும் காதலனுக்கு வித்யா முத்தமிட வேண்டும் என்பது காட்சி. இதை ஆணை மலைக்கு அருகில் உள்ள டாப்ஸிலிப் பகுதி யில் படமாக்க ஏற்பாடு செய்தனர். படப்பிடிப்பை காண இரண்டாயிரம் பேர் திரண்டு நின்றார்கள்.
முத்தக்காட்சியில் நடிக்க வித்யா மறுத்தார். எவ்வளவோ கெஞ்சியும் சம்மதிக்கவில்லை. நீண்ட நேர வற்புறுத்தலுக்கு பின் வேண்டா வெறுப்பாக சம்ம தித்தார். முத்தக் காட்சியில் நடித்த பிறகு அங்கேயே உட்கார்ந்து கதறி அழ ஆரம்பித்தார். ஏன் இப்படி என்னை நடிக்க வைத்தீர்கள் என்று கோபப்பட்டார். அவரை படக்குழுவினர் சமாதானபடுத்தினர்.
கால் மணி நேரம் அழுத பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எம்.பி.ஜி. பிலிம்ஸ்இண்டர் நேஷனல் சார்பில் எஸ்.எம். தியாக ராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்.
Thursday, June 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)