Pages

Saturday, June 26, 2010

கார்த்தி: தமன்னாவை விட காஜல் அகர்வால் சிறந்தவர்

0 comments
 
நடிகர் கார்த்தி - நடிகை காஜல் அகர்வால் ஜோடி நடித்திருக்கும் புதிய படம் நான் மகான் அல்ல. இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நாயகன் கார்த்தி, டைரக்டர் சுசீந்திரன், தயாரிப்பாளர் ஞானவேல், ஒளிப்பதிவாளர் மதி, எடிட்டர் காசி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது கார்த்தி பேசுகையில், `நான் மகான் அல்ல படத்தின் முதல் பாதி கதையை டைரக்டர் சுசீந்திரன் என்னிடம் சொன்னபோது, சிரித்துக்கொண்டே இருந்தேன். சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேனா? என்று அவரிடம் கேட்டேன். நிச்சயமாக பொருத்தமாக இருப்பீர்கள் என்று சுசீந்திரன் சொன்னார். இந்த படத்துக்காக முதல்முறையாக நான் ஒத்திகை பார்த்தேன். ஒரு வாரம் ஒத்திகை நடந்தது. இதை கதை என்று சொல்வதை விட, ஒரு இளைஞனின் வாழ்க்கை என்று சொன்னால், பொருத்தமாக இருக்கும். ஒரு நடுத்தர குடும்பத்தில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் அந்த இளைஞன். எங்கோ ஒரு மூலையில் நடக்கும் தப்பு, அவன் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது. இதுதான் `நான் மகான் அல்ல' படத்தின் கதை. இந்த படத்தில் இடம்‌பெறும் காதல் காட்சிகளில் நான் ரசித்து நடித்தேன். காஜல் அகர்வால் திறமையான நடிகை. அவருக்கு இப்படம் முக்கியமான படமாக இருக்கும், என்றார்.

பையா படத்தில் தமன்னாவுடன் நடித்த கார்த்தி, தமன்னாவையும் திறமையான நடிகை என்று பாராட்டினார். அதேபோல இப்போது காஜல் அகர்வாலை பாராட்டினார். இதையடுத்து நிருபர்கள் `தமன்னா, காஜல் அகர்வால் ஆகிய இரண்டு பேரில், சிறந்த அழகி யார்?' என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த கார்த்தி, `தமன்னாவை விட காஜல் அகர்வால் உயரமானவர். அவரை விட இவருக்கு கண்கள் பெரியவை' என்றார்.இதக்கு அர்த்தம் தமன்னாவை விட காஜல் அகர்வால் சிறந்தவர் என்பதாகவும் இருக்கலாம். இருக்கலாம் இத கவனியுங்கள்

Leave a Reply