விண்ணைத்தாண்டி வருவாயா படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. கௌதமே இந்தி ரீமேக்கையும் இயக்குகிறார். படத்துக்கு இசை, ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்திக்கு ஏற்ப படத்தில் சில மாறுதல்களை கௌதம் செய்துள்ளார். முக்கியமாக ஹீரோயின் வீடு இருக்கும் இடம். தமிழில் கேரளாவின் ஆலப்புழா என்றிருந்ததை கோவாவாக மாற்றியிருக்கிறார் கௌதம்.
தமிழுக்காக ரஹ்மான் போட்ட பாடல்களை அப்படியே பயன்படுத்துகிறார்கள். ஒரு பாடலின் டியூன் மட்டும் மாறுகிறது. இன்னொரு பாடலை புதிதாக சேர்க்கயிருக்கிறார்கள்.
இந்த இரு பாடல்களுக்கான டியூனை ரஹ்மான் உடனடியாக போட்டுக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, June 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)