Pages

Monday, June 21, 2010

நடிகை ஐஸ்வர்யாராய் எந்திரன் ரிலீசுக்கு பின் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார்

1 comments
 
ஐஸ்வர்யாராய். அபிஷேக்பச்சன் திருமணம் 2007 ஏப்ரல் மாதம் நடந்தது.

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்தார். ஹிருத்திக்ரோஷனுடன் ஜோதா அக்பர். மற்றும் சர்கார்ராஜ், ஆங்கிலத்தில் பிங்க் பாந்தர் 2 போன்றவை திருமணத்துக்கு பிறகு நடித்தவை.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ராவணன் படம் இன்று ரிலீசானது. இதே மணிரத்னம் 2006-ல் இயக்கிய குரு படத்தில் அபிஷேக்பச்சனுடன் ஐஸ்வர்யாராயும் சேர்ந்து நடித்த போது தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி ஜோடியாக எந்திரன் மற்றும் குஷாரிஸ், ஆக்ஷன் ரிப்ளே ஆகிய இரு இந்திப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவை ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக இறுக்கமான ஆடைகள் அணியும் அவர் ராவணன் படத்தை விளம்பர படுத்தும் நிகழ்ச்சிகளில் தொழதொழ உடை அணிந்து கலந்து கொண்டார். வயிறு பெரி தாகி இருப்பதை மறைப்பதற்காகவே இத்தகு ஆடைகள் அணிவதாக கூறப்படுகிறது. ஆனாலும் வயிறு வீங்கி இருப்பது வெளியே தெரிந்தது. கர்ப்பமான தகவலை விரைவில் அறிவிக்கப் போகிறாராம். எந்திரன் ரிலீசுக்கு பிறகு பிரசவம் வரை சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போடுகிறார்.

One Response so far.

Leave a Reply