ராவணன் போன்ற பிரமாண்ட படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்குவதில் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு நடுவில்தான் கடும் போட்டியிருக்கும்.
ஆனால் இந்தமுறை போட்டியில் இன்னொரு நிறுவனமும் கலந்து கொண்டது. அது, சிறு படங்களின் ஒளிபரப்பு உரிமையை மட்டுமே வாங்கும் ராஜ் தொலைக்காட்சி.
போட்டியில் கலந்து கொண்டது மட்டுமின்றி மற்ற இரு தொலைக்காட்சிகளையும் முந்திக்கொண்டு ராவணன் ஒளிபரப்பு உரிமையை தனதாக்கிக் கொண்டுள்ளது. ஆம், ராவணன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ராஜ் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
இந்த ஜாக்பாட்டுக்கு ராஜ் தொலைக்காட்சி கொடுத்த விலை ஐந்து கோடிகள். தமிழில் தசாவதாரத்துக்கு அடுத்து அதிக விலைக்கு விற்பனையானது ராவணன் என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, June 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)