ஹிருத்திக்ரோஷன் நடித்த கைட்ஸ் இந்திப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.65 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இதில் நாயகியாக பார் பராமோரி நடித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் குறிப்பிட்ட தியேட்டர்களில் கைட்ஸ் படம் திரையிடப்பட்டு உள்ளது. அங்கும் வசூலில் சக்கைபோடு போடுகிறது. அமெரிக்கா பாக்ஸ் ஆபீசில் 5வது இடத்தை இப்படம் பிடித்துள்ளது. சமீப காலமாக இந்திப்படங்கள் பெரும் வசூல் ஈட்டி வருகின்றன. அமீர்கான், அசின் நடித்த கஜினி படம் உலகமெங்கும் வெளியாகி கோடி கோடியாய் குவித்தது. ஷாருக்கான் நடித்த மை நேம் இஸ் கான், அமீர்கான், மாதவன் நடித்த 3 இடியட்ஸ் போன்ற படங்களும் வசூல் சாதனை படைத்தன. விக்ரம், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் நடித்து அடுத்த மாதம் வெளியாக உள்ள ராவணன் படமும் வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.
Friday, June 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Hi,
Kites a biggest flop movie.
I am not sure how come you got this information.
Rank Film Weekly Nett Gross Total Nett Gross Verdict
1
Kites 7,68,00,000 47,42,00,000 Flop
Boxofficeindia.com
Sorry i hav read this news in news paper that why i put this here so feels sad about giving wrong information thank u Boxofficeindia team next time i won't repeat this this type error i will check ur's after i publish any way thank u for ur info by cinemasuperkings