தெலுங்கு திரையுலகின் இளம் கதாநாயகி ஸ்வேதாபாசு பிரசாத். இவர் ஏற்கனவே “கொத்த பங்காரு லோகம்,” என்ற படத்தில் நடித்து பிரபலமானவர். அதன்பிறகு “ரைடு”, “கஸ்கோ” ஆகியபடங்களில் நடித்தார்.
ரைடு படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் ரமேஷ்வர்மாவுக்கும், ஸ்வேதாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் ஓட்டல்களிலும் விருந்துகளிலும் சந்தித்து காதல் வளர்த்தார்கள். இவர்களது காதல் விவகாரம் தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஸ்வேதா வீட்டில் காலை 8.30 மணியளவில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை குடும்பத்தினர் காப்பாற்றி விட்டார்களாம். தற்போது வீட்டிலேயே சிசிக்சை எடுத்து வருகிறார்.
இயக்குனர் ரமேஷ்வர்மாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியே தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Saturday, June 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)