Pages

Saturday, June 12, 2010

ரம்பாவின் ஹனிமூன் அனுபவங்கள்

0 comments
 
இதுவரை ஹாலிவுட் நடிகைகள் மட்டுமே ஹனிமூனுக்காக விசிட் அடிக்கும் ஃபிஜி ஐலாண்டிற்கு முதல் இந்திய நடிகையாக ரம்பா சென்று வந்திருக்கிறார். ஒரு நாளைக்கே 4 லட்சம் ரூபாய் செலவாகும் இந்த ஃபிஜி தீவில் 15 நாட்கள் தங்கிவிட்டுத் திரும்பியிருக்கிறார் ரம்பா. அந்த ஜிலீர் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். ஹனிமூனுக்காக எங்கே போகலாம்னு யோசிக்காமல் முடிவு எடுத்த இடம்தான் ஃபிஜி ஐலாண்ட்! என்னை ஒருத்தர்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்குக் கூட்டிகிட்டு போகணும்ங்கிறது கணவருடைய ஐடியா. நாங்க போன ஃபிஜி தீவிலுள்ள டர்பில் ஐலாண்டில் மொத்தமே 12 வீடுகள்தான். நாங்க ஒரு வீட்டை எடுத்துத் தங்கினோம். ஜோடிகளுக்கான ஸ்பெஷல் தீவு என்பதால் மற்ற வீடுகளிலும் ஹனிமூன் கப்பிள்ஸ்தான் தங்கியிருந்தாங்க. ஆள்நடமாட்டமே எங்கேயும் பார்க்க முடியல. பின்ட்ராப் சைலன்ஸ். எந்த இடத்திற்குப் போனாலும் அங்கே எங்களைத் தவிர யாருமே கிடையாது. ஹோட்டல் அறையை புக் செய்வதுபோல இந்தத் தீவில் ஒருகடற்கரையையே புக் செய்துக்கலாம். அந்த ஊரில் மொத்தம் 6 கடற்கரைகள். ஒருநாள் முழுக்க நாங்க ஒரு கடற்கரையை புக் பண்ணிக்கிட்டோம். அந்த அமைதியான பீச்சில் நானும் அவரும் மட்டும். தங்கியிருந்த இடத்தில் உபசரிப்புகளும், சாப்பாடு ஏற்பாடுகளும்கூட வித்தியாசமா இருந்துச்சு. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட காபி கப் உட்பட எல்லாத்துலேயும் எங்க ரெண்டு பேருடைய பெயர் எழுதியிருந்தாங்க. தீவிலிருந்து கிளம்பும்போது தங்கியிருந்த வீட்டு வாசலில் ஞாபகார்த்தமாக செடி நட்டு வைத்து, கல்லில் ரம்பா-இந்திரன்னு பெயர் பதிச்சுட்டு வந்திருக்கோம். மறுபடியும் எப்போது போனாலும் எங்க பெயர்களை அங்கே பார்க்கலாம். ஹனிமூன் போறவங்களுக்கு இப்படி ஒரு தனிமை அவசியம். இந்தத் தனிமையில் எங்க அன்பு இன்னும் இணக்கமாச்சு. நியூசிலாந்து எனக்குப் பிடித்த இடமென்பதால் அங்கேயும் போனோம்! என் கணவரின் ஊரான கனடாவுக்கும் சென்று தங்கிவிட்டுதான் திரும்பியிருக்கேன். அடுத்து நான் நடித்துக்கொண்டிருக்கிற விடியும்வரை காத்திரு படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் வெளியாகும்வரை சென்னையில் இருப்பேன். ரொம்ப வித்தியாசமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறேன். கணவர் என் நடிப்பு வேலைக்கு எந்தத் தடையும் சொல்லலை என்கிறார் ரம்பா. கையில காசிருந்தா நிலாவுலயே தேன்நிலவு கொண்டாடலாமே...

Leave a Reply