Pages

Saturday, June 12, 2010

சென்சாரிலும் ஆணாதிக்கம் என்ன கொடுமை இது

0 comments
 
திரைப்படங்களில் சிகரெட் புகைப்பது போன்ற காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி அமைச்சராக இருந்தபோது உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். கலைஞர்களின், தனி மனிதர்களின் சுதந்திரத்துக்கு எதிரான இந்த உத்தரவு விரைவிலேயே பிசுபிசுத்தது.

ஆனாலும், சிகரெட் பிடிக்கும் காட்சிகள் விஷயத்தில் சென்சா‌ரின் கண்டிப்பும், கண் துடைப்பும் சர்ச்சையை கிளப்புவதாகவே உள்ளது.

இந்தி திரைப்படங்களில் பெண்கள் புகைப்பிடிப்பதை தாராளமாக அனுமதிக்கிறார்கள். கம்பெனி படத்தில் மனிஷா கொய்ராலா புகைப்பிடிப்பதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

அதேநேரம் தமிழ் திரைப்படங்களில் பெண்கள் சிகரெட் பிடிக்கும் காட்சிகளை சென்சார் கறாராக மறுத்து வருகிறது. பௌர்ணமி நாகம் படத்தில் மூமைத்கான் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியை அனுமதிக்க மறுத்திருக்கிறது சென்சார். அதேநேரம் ஆண்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிக்கு எந்த எதிர்ப்பும் தெ‌ரிவிப்பது இல்லை.

சிகரெட் பிடிக்கும் காட்சியில் சென்சார் கடைபிடிக்கும் இந்த பாராபட்சம் ஆணாதிக்க உணர்வின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Reply