Pages

Friday, June 18, 2010

கெளதம் மேனன் படத்தை கழற்றிவிட பார்க்கும் அஜித்

0 comments
 
துரைதயாநிதி தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். இதுவல்ல செய்தி!

கார் ரேஸ் என்று சொல்லிக்கொண்டு, உலகம் முழுக்க பறந்துக்கொண்டிருக்கும் அஜீத் இடையில் சென்னை வந்தார். இப்போது ஆள்அரவமே இல்லாமல் இருக்கிறார். அவருடன் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்கிறார்கள்.

இதனால் தயாரிப்பாளரும், இயக்குநர் கெளதம் மேனனும் அஜீத் மீது கடுங்கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வருகிறேன், வரமாட்டேன் என்று எதையும் கூறாமல் வராமல் இருக்கும் அஜீத்தை படத்தில் இருந்தே தூக்கிவிடலாமா என்றுகூட தயாரிப்பாளரும் இயக்குநரும் யோசிப்பதாகத் தகவல்.

‘அதுதானே வேணும்’ என்கிறது அஜீத் தரப்பு. காரணம் ஆரம்பத்தில் இருந்தே படம் தயாரிக்கும் நிறுவனத்தை அஜீத்துக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள்.

ஏதோ கட்டாயத்தின் காரணமாகத்தான் முதலில் அஜீத் ஒப்புக்கொண்டார், இப்படி கண்டும் காணாமல் இருந்தால் தானாகக் கடுப்பாகி தன்னை கழற்றி விடுவார்கள் என்பது அஜீத்தின் எதிர்பார்ப்பு என்கிறார்கள்!

Leave a Reply