Pages

Friday, June 11, 2010

விகடகவி திரைபடத்தின் கதை

0 comments
 
ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால், குடும்பத்துக்கு ஆகாது என்ற மூடநம்பிக்கையை முறியடிக்கும் வகையில், "விகடகவி" என்ற படம் தயாராகி வருகிறது. இது, நகைச்சுவை படம் அல்ல. நல்ல கருத்துடன் கூடிய நகைச்சுவை படம். வினோத், கவிதா, டயானா, கருணா, விருமாண்டி ஆகிய ஐந்து பேர்தான் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். இவர்களின் பெயரின் முதல் எழுத்தை குறிக்கும் வகையில், "விகடகவி" என்ற பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. புதுமுகம் சதீஷ், கேரள அழகி அமலா பால் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் அனைத்து கதாபாத்திரங்களிலும் சினிமாவுக்கு முற்றிலும் புதியவர்களே நடிக்கிறார்கள். புதுமுக இசையமைப்பாளர் ரதன் இசையமைக்க, மா.பொ.வாணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்பட கல்லூரி மாணவரான இவர், 2 ஆயிரம் படங்களுக்கு மேல் சவுண்ட் என்ஜினீயராக பணியாற்றியவர். ஏ.பி.சி. ஸ்டூடியோஸ் சார்பில் சி.சரவணன், டி.ஆர்.சேவுகன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இணை தயாரிப்பு: தனகோடி. படப்பிடிப்பு மதுரை, கம்பம், தேனி, திண்டுக்கல் பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் காட்சிகள், மூன்று காலகட்டங்களில் நிகழ்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply