Pages

Wednesday, June 23, 2010

ஆபாசத்தை விரும்பும் 10 சதவீதம் பேருக்கு மட்டும் படம் எடுத்தால் 90 சதவீதம் பேர் எப்படி வருவார்கள்

0 comments
 
இந்தி சினிமாவை குடும்பத்துடன் பார்க்கவே முடியலை. ஒரே ஆபாசம் என்று ரயில்வே முன்னாள் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் நச் கமெண்ட் அடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் சினிமா குறித்த கேள்விக்கு விரிவான பதில் அளித்துள்ளார். அதன் விவரம்:

நான் சிறு வயதில் நிறைய இந்தி படங்கள் பார்ப்பேன். அதில் மனதை வருடும் இனிய பாடல்கள், புதுப்புது கருத்துக்களை சொல்லும் கதைகள் இருந்தன. இதனால் ஒவ்வொரு படமும் எனக்கு ஒவ்வொரு விதத்தில் பிடிக்கும். ஆனால் சமீபகாலமாக வரும் இந்தி படங்களில் நல்ல கருத்துள்ள பாடல்களே இல்லை. இசையும் ரம்மியமாக இல்லை. நல்ல கருத்துக்களை சிந்தித்து எழுத முடியாததால் பாடல் ஆசிரியர்கள் இரட்டை அர்த்தம் மிகுந்த, ஆபாச பாடல்களை எழுதுகிறார்கள். இது சமுதாயத்தை சீர்குலைத்து விடும். இப்படிப்பட்ட பாடல்களை நாம் அனுமதிக்க கூடாது.

இதே போல் படத்தில் தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை ஆபாச காட்சிகள்தான் இடம் பெறுகின்றன. ஆக்ஷன் என்ற பெயரில் வெறும் வன்முறை, வக்கிரத்தைத்தான் காட்டுகிறார்கள். இதனால் நாம் குடும்பத்துடன் சென்று இந்த படங்களை பார்க்க முடிவதில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் ரெயில்வே துறையில் சீர்திருத்தம் கொண்டு வந்தது போல் சினிமாத் துறையிலும் பல்வேறு முன்னேற்றங்களைக் கொண்டு வருவேன். காலத்திற்கேற்ற வகையில் தரமான சினிமா எடுத்தால் எல்லோரும் குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள். ஆனால் பழைய சினிமாவையும் கதைகளையும் காப்பியடித்து எடுத்தால் அதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையே போய்விடும்.

இவ்வாறு கூறிய லாலு, சினிமா ஒரு நல்ல தொழில். தற்போது அதில் திறமைசாலிகள் குறைந்து போனதால் நஷ்டத்தை சந்திக்கிறது. ஆபாசத்தை தவிர்த்து நல்ல படங்கள் எடுத்தால் கூட்டம் அதிகம் வரும். ஆபாசத்தை விரும்பும் 10 சதவீதம் பேருக்கு மட்டும் படம் எடுத்தால் 90 சதவீதம் பேர் எப்படி வருவார்கள்?” என்று கேள்வியும் எழுப்பியுள்ளார். லாலுன்னாலே நச் கமெண்ட்தான்! நம்ம வாசகர்களோட கருத்து என்ன?

Leave a Reply