சல்மான் கான் குறித்து இப்போதெல்லாம் கத்ரினா கருத்து சொல்வதில்லை. பிற ஹீரோக்களுடன் நடிக்க இவர் ஆர்வம் காட்டுவதால் சல்மான் கானுடன் கத்ரினாவுக்கு சண்டை என்று கூட மீடியாக்கள் எழுதின. ஆனால் உண்மை என்ன?
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சல்மான் கானை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் கத்ரினா. தான் இந்தளவுக்கு இன்டஸ்ட்ரியில் வளர்ச்சியடைய சல்மான் கான்தான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
கத்ரினா சினிமாவில் அறிமுகமானது 2003ல். ஆனால் 2005ல் சல்மான் கானுடன் அவர் நடித்த படமே அவரது முதல் ஹிட். அப்போதே, நீ பெரிய இடத்துக்கு வருவாய் என்று கத்ரினாவை உற்சாகப்படுத்தினாராம் சல்மான்.
“அவருடைய நம்பிக்கையும் வழிகாட்டலும்தான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது” என்று சல்மானை புகழ்ந்துள்ளார்.
சல்மானுக்கு ஏற்ற ஜோடி கத்ரினா என்பதை மீண்டும் ஒருமுறை தனது பேட்டி மூலம் நிரூபித்திருக்கிறார்.
Tuesday, June 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)