Pages

Monday, June 28, 2010

அனுஷ்காவுக்கு விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு

0 comments
 
தெலுங்கு படம் ஒன்றில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பூனாவில் நடக்கிறது.

மகேஷ்பாபுடன் அனுஷ்கா நடிக்கும் பாடல் காட்சிகளை பூனாவில் படமாக்கி வருகின்றனர். "சிங்கம்' படத்துக்குப் பின் தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும், நல்ல கதைகளையே தேர்வு செய்து நடிக்க அனுஷ்கா விரும்புவதாக அவரது தரப்பு தெரிவிக்கிறது.

பூபதி பாண்டியன் இயக்கும் "வெடி' படத்துக்கு அனுஷ்காவை நாயகியாக்க பேச்சு நடக்கிறது. இதில் ஹீரோவாக விக்ரம் நடிக்கிறார். விக்ரமின் ஜோடியாக இலியானாவுக்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், அவரின் கால்ஷீட் பிரச்னை அனுஷ்காவுக்கு சாதகமாக அமையும் என்கிறார்கள். தமன்னாவிடமும் பேச்சு நடக்கிறது.

Leave a Reply