விவேக் ஓபராய் நடித்திருப்பதால் ரத்த சரித்திரம் படத்தை தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வெளியிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர் சிலர்.
தீவிரமாக இருக்க வேண்டிய சீமானோ, தம்பி சூர்யாவுக்காக விவேக் ஓபராயை மன்னிப்பதாக பேட்டி கொடுத்து திடீர் பாதிரியாகியிருக்கிறார். சீமானின் கருணையின் பெருவெள்ளம் ராஜபக்சேயை தீண்டி திருநிலைப்படுத்தினாலும் ஆச்சரியமில்லை.
இந்தக் குழப்படிகள் ஒருபுறமிருக்க, ரத்த சரித்திரத்தை வாங்குவதில் ஒரு போட்டியே நடக்கிறது. குறிப்பாக படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமைக்கு.
இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கான விநியோக உரிமை 4.5 கோடிக்கு விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யா நடித்த ஒரு படம் இத்தனை அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, June 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)