Pages

Thursday, June 24, 2010

செல்வராகவனுக்கு பதில் கவுதம்மேனன் வருத்தத்தில் செல்வா

0 comments
 
தெலுங்கின் பிரபல கதாநாயகன் ராணாவை வைத்து ஒரே சமயத்தில் தமிழ்- தெலுங்கு இருமொழிகளிலும் ஒரு சரித்திரப் படம் தொடங்க இருந்தார் செல்வராகவன்.

இடையில் என்ன நடந்ததோ, ஹீரோவின் தந்தை அந்தப் படத்தைக் கைவிடுவதாக அறிவித்துவிட்டார். விஷயம் அத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை. இயக்குநர் கவுதம்மேனன் இயக்கத்தில் ராணா நடிக்க, தமிழ் - தெலுங்கில் ஒரு படம் தயாரிக்க ராணாவின் தந்தை முடிவு செய்திருக்கிறார்.

தெலுங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நாயகியாக வந்த சமந்தாதான் இதிலும் நாயகி. விரைவில் படத்துக்கான போட்டோ ஷூட் நடக்க இருக்கிறது. ஏகக் கடுப்பில் இருக்கும் செல்வராகவன் வடை போச்சே என்று புலம்பாத குறைதான்.

Leave a Reply