நயன்தாராவும் பிரபுதேவாவும் மணக்கோலத்தில் இருப்பது போன்று இண்டர்நெட்டில் படங்கள் பரவியுள்ளன. இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதாக அவற்றில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படம் உண்மையா என்று இருவரிடமும் உறுதி படுத்த முயன்றபோது செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. நிஜமாகவே திருமண கோலத்தில் இப்படம் எடுக்கப்பட்டதா அல்லது போலியாக “மார்பிங்” செய்து வெளியிடப்பட்டதா என்று தெரியவில்லை.
நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் “வில்லு” படப்பிடிப்பில் காதல் மலர்ந்தது. அதன் பிறகு இருவரும் நெருக்கமாக பழகினார்கள். நயன்தாராவை திருமணம் செய்ய மனைவி ரம்லத்திடம் பிரபுதேவா அனுமதி கேட்டார். அவர் சம்மதிக்க வில்லை.
பிரபுதேவாவுடனான தொடர்பை நயன்தாரா துண்டிக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் எங்கு பார்த்தாலும் அடிப்பேன் என்றும் ரம்லத் பேட்டி அளித்தார். இதையடுத்து சில மாதங்களாக சென்னைக்கு வருவதை நயன்தாரா தவிர்த்தார். ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. நயன்தாராவும் பிரபுதேவாவும் சேர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். கேரளாவில் நடந்த மலையாள இயக்குனர் ஒருவரின் இல்லத் திருமணத்தில் கைகோர்த்த படி சென்று பங்கேற்றனர்.
ஐதராபாத்தில் நடந்த பட விழாவில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியில் ஒன்றாக நடனம் ஆடினார்கள். இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றிய கேள்விகளுக்கு சொந்த விஷயம் என்று கூறி பதில் சொல்ல மறுக்கிறார்கள். இந்த நிலையில் தான் திருமண கோலத்திலான படத்தை இணைய தளங்கள் வெளியிட்டு உள்ளன.
Saturday, June 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
its very clear and transparant that this photo is a computer grapic picture (copy and paste).