வட இந்தியாவில் இயங்கிவரும் நூற்றுக்கணக்கான காவி கட்சிகளில் ஒன்று சென்சார் போர்டுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. ராவண் படத்தின் சென்சார் சான்றிதழை திரும்பப் பெற வேண்டும் என்பது அந்தக் காவி கட்சியின் வேண்டுகோள்.
ஏனாம் இந்த ‘திடுக்’ கடிதம்?
ராவண் படத்தை மணிரத்னம் ராமாயணத்தை மையமாக வைத்து எடுத்திருக்கிறார் என்று விளம்பரம் செய்கிறார்கள். படத்தில் சீதா பிராட்டியாக நடித்திருப்பவர் ஐஸ்வர்யாராய். அவர் ராவணன் அபிஷேக் பச்சனை காதலிப்பது போல் கதை செய்திருக்கிறார்கள். இது நாங்கள் தெய்வமாக வணங்கும் சீதா பிராட்டியாரை கேவலப்படுத்தும் செயல் என்று அந்தக் கட்சி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இப்படிதான் படத்தைப் பார்க்காமலே காந்தியை கமல் கேவலப்படுத்துவதாக ஹேராம் படத்துக்கு எதிராக காங்கிரசார் வன்முறையில் ஈடுபட்டார்கள். படம் வெளிவந்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாயே திறக்கவில்லை. அப்படியொரு நிலைமை காவி கட்சிகளால் ராவண் படத்துக்கு ஏற்பட்டுவிடக் கூடாது.
Thursday, June 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)