விஜய்க்கு வெற்றியை கொடுத்த பெரும்பாலான படங்கள் பிற மொழிகளிலிருந்து ரீமேக் செய்யப்பட்டவை. காதலுக்கு மரியாதை, கில்லி போன்றவற்றை சிறப்பாக குறிப்பிடலாம்.
கடைசியாக வெளியான எந்தப் படமும் சரியாகப் போகாத நிலையில் மீண்டும் ரீமேக்கிடமே சரணடைந்துள்ளார் இளைய தளபதி. விஜய் தற்போது நடித்துவரும் காவல்காரன் மலையாளத்தில் வெளியான பாடிகார்ட் படத்தின் ரீமேக். படத்தை இயக்கும் சித்திக் ஏற்கனவே தனது மலையாள ப்ரண்ட்ஸ் படத்தை தமிழில் விஜய்யை வைத்து ரீமேக் செய்து ஹிட் கொடுத்தவர்.
அடுத்து ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் வேலாயுதம் படமும் ரீமேக் என்று தெரிய வந்துள்ளது. சில ஆண்டுகள் முன் நாகார்ஜுனா, சௌந்தர்யா நடித்த ஆஸாத் என்ற படத்தையே வேலாயுதம் என்ற பெயரில் எடுக்கின்றனர். இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். இவர் தனுஷின் மாப்பிள்ளை படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சொந்தமா எப்போ யோசிக்கப் போறீங்க சார்?
Tuesday, June 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)