பிரியாமணிக்கு தமிழில் படங்கள் இல்லை. “கண்களால் கைது செய்” படத்தில் அறிமுகமானவர். “அது ஒரு கனாக்காலம்”, “பருத்தி வீரன்”, “மலைக்கோட்டை” “தோட்டா”, “ஆறுமுகம்”, “நினைத்தாலே இனிக்கும்” போன்ற படங்களில் நடித்தார். “பருத்தி வீரன்” சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது.
ஆனாலும் கடந்த ஒரு வருடமாக தமிழில் கதாநாயகி வாய்ப்பு வர வில்லை. “ராவணன்” படத்தில் மட்டும் சிறு வேடத்தில் தலைகாட்டி விட்டு போனார்.
பிரியாமணியை இயக்குனர்களும் தயாரிப்பா ளர்களும் ஒதுக்குகிறார்கள்.
இதுபற்றி பிரியாமணி அளித்த பேட்டி வருமாறு:-
“பருத்தி வீரன்” படத்தில் சிறப்பான நடிப்பை வெளியிட்டேன். அதற்காக தேசிய விருதும் கிடைத்தது. ஆனாலும் எனக்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் வரவில்லை. நான் ஓரம் கட்டப்பட்டு உள்ளேன்.
தமிழ் பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்ன நினைத்து இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று புரிய வில்லை. நான் நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளேன். ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வருவதில்லை.
மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. “ராவணன்” படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. மலையாளத்தில் வெளியான “திரக்கதா” படத்தில் எனக்கு விருது கிடைக்க வேண்டியது. சொந்த குரலில் டப்பிங் பேசாததால் அந்த வாய்ப்பை இழந்தேன். தெலுங்கு படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் டப்பிங் பேச முடியவில்லை.
எல்லா நடிகைகளுமே இப்போது கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் நான் பிகினி உடையில் நடித்து விட்டேன் என்று எல்லோரும் என்னைத்தான் விமர்சிக்கிறார்கள்.
தெலுங்கில் “துரோணா” என்ற படத்தில் ஒரு கனவு காட்சியில்தான் அப்படி நடித்து இருக்கிறேன். எனது உடல் அமைப்புக்கு கவர்ச்சி உடை அணிவது பொருத்த மாக இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை.
நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியில் நீச்சல் உடையைத்தான் அணிய வேண்டும். சேலை உடுத்திக் கொண்டா குளிப்பார்கள்.
இவ்வாறு பிரியாமணி கூறினார்.
Saturday, June 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)