Pages

Tuesday, June 1, 2010

நமீதா: நான் வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்

0 comments
 
ஐஃபா விழாவில் பங்கேற்க வருமாறு நடிகை நமீதாவுக்கு ஐஃபா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை புறக்கணித்துள்ளதோடு, தமிழர் நலனுக்கு எதிரான எந்த நிகழ்விலும் நான் பங்கேற்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஐஃபா விழாவின் முதல்நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு நடனமாட நடிகை நமீதாவுக்கு ஐஃபா அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக பெரும் தொகை ஒன்றையும் வழங்க இலங்கை அரசு மற்றும் ஐஃபா நிர்வாகம் நமீதாவை அணுகியுள்ளது.

ஆனால், இந்த வாய்ப்பை அவர் ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டார். இதுகுறித்து நமீதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஐஃபா விழாவுக்காக என்னை சில தினங்களுக்கு முன்பே அணுகினார்கள். என்னை இந்த விழாவில் நடனமாட அழைத்தார்கள். அதற்காக பெரும் தொகையும் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இங்கே இந்த பிரச்சனை இருப்பது தெரிந்த பிறகும் எப்படி நான் போக முடியும்.

எனக்கு சோறு போட்டது தமிழ் மக்கள்தான். இன்று இந்த அந்தஸ்து வந்தததும் அவர்களால்தான். எனவே யாரும் சொல்வதற்கு முன்பே மறுத்துவிட்டேன். வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply