மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான ராவணன் 18 -06 -10 அன்று வெளியானது. படத்தைக் காண உள்ளூரிலும், வெளியூரிலும் ரசிகர்கள் முட்டி மோதினார்கள். இந்தியிலும் இதுதான் நிலைமை.
ஆனால் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா?
மணிரத்னத்தின் தீவிர விசிறிகளைக் கூட திருப்திப்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. வழக்கம்போல ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம், ஆக்சன் காட்சிகள், பாடல் காட்சிகள் என தொழில்நுட்ப விஷயத்தில் ராவணன் மிரட்டியிருக்கிறது. ஆனால் கதை, திரைக்கதை, யதார்த்தம் இவற்றில் படம் பெருமளவு சறுக்கியிருக்கிறது.
ஓபனிங் நன்றாக இருந்தாலும் ஒரு வாரத்துக்குள் படத்தின் கலெக்சன் பெரிய அளவில் பாதிக்கப்படும் என பாலிவுட் விமர்சகர்கள் கணித்திருக்கிறார்கள். இந்தக் கணிப்பும், படம் பார்த்து வரும் ரசிகர்களின் மனநிலையும் ஒன்றாக இருப்பதுதான் ராவணனின் முன்னிருக்கும் மிகப் பெரிய சவால்.
Monday, June 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)