Pages

Saturday, June 12, 2010

அரசியலில் சூப்பர் ஸ்டார் ரஜினி குதிக்கிறார்

2 comments
 
எந்திரன் ரிலீசுக்கு பிறகு ரஜினி அரசியலில் குதிப்பார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. 2008-ல் ரசிகர்களே பொறுமை இழந்து அரசியல் கட்சி துவக்கினர். ரஜினி உருவத்துடன் கட்சி கொடியும் உருவாக்கினார்கள்.

அப்போது ரசிகர்ளை சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு அழைத்து பேசினார்.

சினிமாவுக்கே பயிற்சி எடுத்து நான் வந்தேன். அரசியலுக்கு வர புத்தி சாலித்தனமோ அறிவோ அவசியம் இல்லை. சூழ்நிலை அமைய வேண்டும் என் றெல்லாம் கூறினார்.

தற்போது அதற்குரிய சூழ்நிலைகள் கனிந்திருப்பதாக ரசிகர்கள் நம்புகின்றனர். இவ்வளவு காலமும் ரஜினிக்கு கிடைத்துள்ள அரசியல் அனுபவங்கள் தனி கட்சி துவக்க போதுமானது என்கிறார்கள்.

1995-ல் பாட்ஷா பட வெற்றி விழாவில்தான் ரஜினிக்கு அரசியல் வித்து ஊன்றபட்டது. அப்போது வெடிகுண்டு கலாசாரம் பரவுவதாக அவர் விமர்சித்து பேசியது அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தின. எதிர்ப்பு காட்டினார்கள். இதனால் 1996 தேர்தலில் தி.மு.க. த.மா.கா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வெற்றி பெற செய்தார்.

அதன் பிறகு பா.ம.க. வுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் மோதல் ஏற்பட நிலைமை மாறியது. 2004-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. இடம் பெற்றிருந்த பாரதீய ஜனதா கூட்டணிக்கு ஓட்டு போடச் சொன்னார். ஆனாலும் அக்கூட்டணி தோற்றது. பின்னர் நடந்த தேர்தல்களில் யாரையும் ஆதரிக்காமல் நடுநிலை வகித்தார். பல்வேறு அரசியல் கூட்டங்களில் மாறு வேடத்தில் போய் பங்கேற்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இவ்வளவு அனுபவங்கள் ரஜினியை அரசியலில் பழுத்த பழமாக்கி இருக்கிறது. அவர் தேடிய அனுபவங்கள் கிடைத்து விட்டது என்கின்றனர்.

எந்திரன் ரிலீசுக்கு பிறகு புதிய படங்களில் நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை. எனவே அரசியலில் ஈடுபடுவது உறுதி என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விரைவில் ரசிகர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். அப்போது அரசியலில் ஈடுபடும் அறிவிப்பை வெளியிடலாம் என்கின்றனர். அதற்கு முன்னோட்டமாக கடந்த சில மாதங்களாக புதிய பொறுப்பாளரை நியமித்து தமிழ்நாடு முழுவதும் ரசிகர் மன்ற அமைப்புகள் சீரமைக்கப்படுகின்றன. சமூக சேவை பணிகளிலும் ரசிகர்கள் முழு வீச்சில் இறக்கி விடப்பட்டு உள்ளனர்.

2 Responses so far.

  1. Rajni will never join in politics. This false news is spread to make Endhiran film hit, But Rajni fans are now clear they wont be fools no more.

Leave a Reply