திரைக்கு வந்த சில நாட்களிலேயே தமிழ் தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலைக் கிளப்பியிருக்கும் படம் 'தி கராத்தே கிட்' . ஜாக்கிஜான், வில் ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் இருவரும் இதில் குரு சிஷ்யனாக வருகின்றனர்.
படத்துக்குப் படம் மாஸ்டர் மாஸ்டராகத் தேடி கராத்தே, குங்க்பூ பழகிவந்த ஜாக்கிஜான், இந்தப் படத்தில் கராத்தே மாஸ்டராகி பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.
கலக்கலான சண்டைகளுக்குக் குறைவில்லாத படம். ஒரே நேரத்தில் ஜாக்கிஜான் ரசிகர்களையும் குழந்தைகளையும் தன் பக்கம் ஈர்த்திருக்ககிறது. தமிழ்ப்படங்கள் திரையிட்ட தியேட்டர்களைவிட இந்தப் படத்துக்கு கூட்டம் அலைமோதுவதைப் பார்த்துத்தான் இந்த வயிற்றெரிச்சல். உலக அளவில் மட்டுமல்லாமல் தமிழ்த் திரையுலக அளவிலும் வசூலை அள்ளிக் கொட்டுகிறது.
முந்தைய ஜாக்கி படங்களின் தமிழக அளவிலான வசூலை விரைவில் இது முறியடிக்கும் என்கிறார்கள். என்ன செய்வது நம்ம ஊர் ஜாக்கிஜான்கள் சண்டை என்று சொன்னதுமே, டூப்பை வைத்து எடுத்துவிடுங்களேன் என்று சொல்பவர்களாக இருக்கிறார்களே.
Wednesday, June 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
hi this is really true.
www.ciniposters.com