அஜீத் 50-வது படத்துக்கு தயாராகிறார். முந்தைய “அசல்” படத்தை விட அழுத்தமான கதையம்சம் உள்ள படமாக 50-வது படம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.
இந்த படத்தை கவுதம் இயக்குகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கவுதமுக்கு பதில் வெங்கட்பிரபு இயக்குவார் என பெயர் அடிபடுகிறது.
சமீபத்தில் அஜீத்தும் வெங்கட்பிரபுவும் சந்தித்து பேசினர். அப்போது தன்னிடமிருந்த கதையொன்றை அஜீத்திடம் கூறினார். மும்பை தாதாக்களை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்து அம்சங்களும் இருந்ததாம். அஜீத்துக்கு கதை ரொம்ப பிடித்து போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் அஜீத்தின் 50-வது படத்தை இயக்கும் வாய்ப்பு வெங்கட்பிரபுக்கு போகிறது. இவர் ஏற்கனவே சென்னை 28 என்ற ஹிட் படத்தை எடுத்து பிரபலமானார். அவர் இயக்கிய சரோஜா படமும் வெற்றிகரமாக ஓடியது.
அஜீத்தின் 50-வது படத்தை தமிழ், தெலுங்கில் இயக்க முடிவு செய்துள்ளாராம். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவையும் இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடக்கிறது.