Friday, July 30, 2010
வேலாயுதம் திரைபடத்தின் கதை
வேலாயுதம் படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் படத்தின் பரபரக்கும் கதை என்ன? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. முதன் முதலாக டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா ஆகியோர் நடிக்கிறார்கள். கதைப்படி, தமிழ்நாட்டில் இருக்கும் ஏழுகோடி பேர்களில் ஒருவனாக இருக்கும் விஜய், அந்த ஏழுகோடி மக்களுக்கும் ரியல் சூப்பர் ஹீரோவாக விஸ்வரூபம் எடுப்பாராம். அணு அளவுக்கு சிறியவனாக இருக்கும் நாயகனை, வில்லன் கூட்டம் சீண்டிப் பார்க்கும்போது அவன் தீய சக்திகளுக்கு எதிரான அணு ஆயுதமாக எப்படி மாறுகிறான் என்பது விறுவிறுப்பான கதையாம். அறிமுக நாயகி ஹன்சிகா மோத்வானி பாவாடை தாவணியில் நடிக்கவுள்ளார், என்று சொல்லும் படத்தின் டைரக்டர் ஜெயம்ராஜா, இந்த படம் எம்ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படம் மாதிரியான விறுவிறுப்பு மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும், என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.அப்படினா இதுவும் ரீமேக் படம்தானா?. பயப்பட வேண்டாம் இது அவரோட சொந்த படம்னு நம்புவோம்
Subscribe to:
Post Comments (Atom)