Friday, July 16, 2010
ஷங்கர் 3 இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்
இந்தியில் அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் படம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவிலே மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 2009ம் ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் மிகப் பெரும் லாபத்தை ஈட்டிக்கொடுத்தது. இப்படத்தில் மாதவனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. படத்தை ரீமேக் செய்யும் உரிமையை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இப்படத்தை ரீமேக் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எந்திரன் படத்தை சமீபத்தில் முடித்த ஷங்கர் 3 இடியட்ஸ் படத்தின் கதை விவாதத்தில் உள்ளதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் பவன் கல்யாண் இந்தியில் அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் யார் நடிப்பார் என்பது இன்னும் இழுபறியாக உள்ளது. இளைய தளபதி விஜய் அமீர்கான் கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரிகிறது, தற்போது "அ" நடிகருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சீக்கிரமா யார் தான் நடிக்கிறாங்கன்னு சொல்லுங்கப்பா....
Subscribe to:
Post Comments (Atom)