Pages

Friday, July 16, 2010

மதராசபட்டினம் படத்தை குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்த முதல்வர் கருணாநிதி

0 comments
 
இயக்குனர் கிரீடம் விஜய் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மதராசபட்டினம் படத்தை முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்தார். ஆர்யா - எமி ஜாக்சன் நடித்துள்ள இப்படத்தில் சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்து காதலை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய். அதுவும் மதராசப்பட்டினத்து டோபிகானா பகுதியில் வசிக்கும் சலவைத் தொழிலாளி ஒருவருக்கும், அந்த மாகாணத்தையே ஆளும் ஆங்கிலேயே கவர்னரின் செல்ல மகளுக்குமிடையேயான காதல் கதை. அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றுள்ள இப்படத்தின் சிறப்பு காட்சியை முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் கண்டுகளித்தார். படம் முடிந்ததும் இயக்குனர் விஜய், நாயகன் ஆர்யா உள்ளிட்ட குழுவினரை மனதார பாராட்டிய முதல்வர், பழைய சென்னையை தத்ரூபமாக காட்டியமைக்காக தனது மகிழ்ச்சியையும் தெரிவித்தார். மலரும் நினைவுகள்!

Leave a Reply