Pages

Friday, July 30, 2010

பில்லா-2 திரைபடத்தில் புதிய ஸ்டைலில் தோன்றுகிறார் அஜித்

0 comments
 
ரஜினி நடித்து வெற்றி கரமாக ஓடிய “பில்லா” படம் அஜீத் நயன்தாரா ஜோடியாக நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் பழைய “மைநேம் இஸ் பில்லா”, “வெத்தலையை போட் டேன்டி” போன்ற பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இருந்தன.

பிரபு, நமீதா போன் றோரும் நடித்தனர். விஷ்ணு வர்த்தன் இயக்கினார். கடந்த 2008-ல் இப்படம் ரிலீசானது.

தற்போது “பில்லா” படத்தின் 2-ம் பாகத்தை படமாக்கவும் முடிவு செய்துள்ளனர். அஜீத்தே இதிலும் நடிக்கிறார். விஷ்ணு வர்த்தன் இயக்குகிறார். படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்குகிறது.

இதுபற்றி விஷ்ணு வர்த்தன் கூறும்போது, பில்லா-2” படத்துக்கான கதை தயாராகி விட்டது. இக்காலத்து இளைஞர்களை கவனத்தில் கொண்டு கதையை உருவாக்கியுள்ளோம். எல்லோருக்கும் பிடிக்கும்.

இப்படத்தில் அஜீத் புதிய ஸ்டைலில் தோன்றுவார் என்றார்.

இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

Leave a Reply