Pages

Saturday, July 10, 2010

மறுபடியும் அவதார் திரைப்படம் புதுபொலிவுடன் வெளிவருகிறது

0 comments
 
பிரபல ஆலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ஆங்கில சினிமா படம் அவதார். இது “3டி” என்ற முப்பரிமாணம் தொழில் நுட்பத்துடன் எடுக்கப்பட்டபடம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு பரபரப்பை யும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது. இப்படம் தொழில் நுட்பத்துக்காக பல ஆஸ்கார் விருதுகளையும் பெற்றது.
இந்த நிலையில் புதுப்பொலிவுடன் அவதார் சினிமா படம் மீண்டும் வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. படம் முழு வதும் “3டி” தொழில் நுட்பத் துடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்தின் நீளம் கருதி ஏற்கனவே நீக்கப்பட் டிருந்த 8 நிமிட நேர பிரமாண்ட காட்சிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. முற்றிலும் “3டி” தொழில் நுட்பம் இருப்பதால் குறிப்பிட்ட சில தியேட்டர் களில் மட்டுமே இது திரையிடப்பட உள்ளது.
அவதார் படத்தில் வரும் ”பண்டோரா” கதா பாத்திரத்தை புதிய பிரமாண்டத்துடன் மீண்டும் பார்க்க வேண்டும் என்று உலக மக்கள் கருத்து தெரிவித் துள்ளனர். எனவே மீண்டும் “அவதார்” படத்தைரிலீஸ் செய்து இருப்பதாக டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் தெரி வித்துள்ளார்.

Leave a Reply