பிரபுதேவா காதலால் நயன்தாராவிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலுமே முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துள்ளார். சம்பளம் ரூ.1 கோடிக்கு மேல் வாங்குகிறார். உச்ச நிலையில் இருந்த அவரை காதல் பிரச்சினை தடுமாற வைத்துள்ளது.
“வில்லு” படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் பிரபுதேவா மனைவி ரம்லத் எதிர்ப்பால் அந்த திட்டத்தை தள்ளி போட்டனர்.
தற்போது இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் நட்சத்திர ஓட்டல்களில் தனி குடித்தனம் நடத்துவதாகவும் கிசு கிசுக்கள் பரவியுள்ளன. அதை மெய்ப்பிப்பது போலவே நயன்தாராவின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் தெரிகிறது.
முன்பெல்லாம் வந்த படங்களையெல்லாம் ஒப்பு கொண்டார். கவர்ச்சிக்கும் தயங்குவது இல்லை. “பில்லா” படத்தில் நீச்சல் உடையில் தோன்றி பரபரப்பு ஏற்படுத்தினார். தெலுங்கு படங்களிலும் அரை குறை ஆடையுடன் துணிச்சலாக நடித்தார். ஆனால் இப்போது அதுபோன்ற அணுகுமுறைகள் அவரிடம் இல்லை. முதல் நிபந்தனையாக கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுக்கிறாராம். ஆர்யா ஜோடியாக நடித்த “பாஸ் என்கிற பாஸ்கரன்” படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் பாடல் காட்சிகளில் கூட கவர்ச்சி காட்ட மறுத்தாராம்.
கன்னடத்தில் ரூ.1 கோடி சம்பளத்தில் சிவராஜ்குமார் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதை மறுத்து விட்டார். இந்த படத்தை ஒதுக்குவதற்கு பிரபுதேவாதான் காரணம் என்கின்றனர். புதுப்படங்களில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டு வருகிறார். பிரபுதேவாவின் அனைத்து செலவுகளையும் நயன்தாராவே கவனித்துக் கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பண கஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். பாங்கியில் போட்டு வைத்து தொகை கரைந்து போனதால் விளம்பர படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
Saturday, July 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)