தமிழகமெங்கும் இன்று ரிலீசான ஆனந்தபுரத்து வீடு பேய் படத்தில் நடித்துள்ளார் சாயாசிங். இதில் நாயகன் நந்தா. பிரபலமான “மர்மதேசம்” டி.வி. தொடரை இயக்கிய நாகா டைரக்டு செய்துள்ளார்.
சாயாசிங் ஏற்கனவே “திருடா திருடி”, “வல்லமை தாராயோ” படங்களில் நடித்துள்ளார்.
“ஆனந்தபுரத்து வீடு” பேய் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சாயாசிங் சொல்கிறார்.
இந்த படத்தின் கதை பிடித்ததால் உடனே ஒப்புக்கொண்டேன். இயக்குனர் நாகா திறமையானவர். புத்தி கூர்மை உள்ளவர். டி.வி. தொடர்கள் எடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
நந்தா தமிழ் பேசி நடிக்க எனக்கு உதவினார். இப்படம் திரில்லர் கதை. படம் பார்ப்பவர்களை சீட் நுனிக்கு வரவைக்கும். எனக்கு பேய் நம்பிக்கை உண்டு. உலகில் நல்லவைகளும், தீய சக்திகளும் இருக்கின்றன. கடவுள் இருக்கிறார் என்று எப்படி நம்புகிறேனோ அதுபோல் பேய்கள் உண்டு என்பதையும் நம்புகிறேன்.
இவ்வாறு சாயாசிங் கூறினார்.
Friday, July 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)