Pages

Saturday, July 10, 2010

கவர்ச்சிக்கு மாறிய திரிஷா

2 comments
 
திரிஷா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். இந்தியில் அக்ஷய்குமார் ஜோடியாக நடிக்கும் “காட்டா மீட்டா” படத்திலும் கமலுடன் நடிக்கும் “மன்மதன் அம்பு” படத்திலும் இதுவரை இல்லாத அளவு கவர்ச்சியாக தோன்றுகிறாராம். அத்துடன் “மேக்சிம்” என்ற ஆங்கில பத்திரிகைக்கும் வயிறு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

தென் இந்திய நடிகைகளுக்கு கவர்ச்சியை விட அழகு கூடுதலாக இருக்கும். புடவை மாடர்ன் டிரெஸ் எல்லாம் பொருந்தும். இந்திப்படங்களில் தென்னிந்திய நடிகைகள் நிறைய பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஏற்கனவே பாப்புலராக உள்ள நடிகைகள் திடீர் இந்தி திரையுலகுக்கு வருவது எளிதாக உள்ளது.

பொதுவாக காதல் காட்சிகளில் நடிப்பது என்பது கஷ்டமானது. படப்பிடிப்பு நடக்கும்போது சுற்றி நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் முன்னால் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது சுலபமானது அல்ல. எனவே தான் காதல் சீன்களில் நடிப்பதற்கு நான் ஒரு எல்லை வைத்து இருக்கிறேன்.

பிரியதர்ஷன்தான் என்னை இந்திக்கு கொண்டு வந்தார். “லேசா லேசா” படத்தில் என்னை அறிமுகம் செய்த வரும் அவர்தான். அக்ஷய்குமார் ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கவர்ச்சி நடிகைகளாக கருதுவது கரீனாகபூரையும், ஏஞ்சலினா ஜோலியும்தான்.

ரஜினியும் கமலும் வெவ்வேறு துருவத்தில் திறமையானவர்கள். கமல் ஆரம்பத்தில் கடுமையாக தெரிவார். பழகியதும் ரொம்ப சகஜமாக ஆகி விடுவார். ரஜினி மக்களின் அபிமான கலைஞர்.

2 Responses so far.

  1. அவர் ஏஞ்செலினா ஜோடி அல்ல "ஏஞ்செலினா ஜோலி"

  2. Jeyamaran says:

    தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி திருத்திவிட்டேன்

Leave a Reply