ஆர்யாவுக்கும் மதராச பட்டிணம் நாயகி அமிஜாக்சனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு பரவியுள்ளது.
அமிலண்டனைச் சேர்ந்தவர். இளம்பெண் களுக்காக அழகி போட்டியில் பட்டம் வென்றவர். அங்கு மாடலிங்தொழில் செய்து வருகிறார்.
“மதராசபட்டிணம்” படத்தில் ஆங்கில நடிகை தேவை என்பதற்காக இயக்குனர் விஜய் லண்டனில் முகாமிட்டு நிறைய போட்டோக்கள் பார்த்து அமியை தேர்வு செய்தார்.
படப்பிடிப்பில் முதல் சில நாட்கள் ஆர்யாவும், அமியும் அவ்வளவாக பேசிக் கொள்ளவில்லை. ஆனால் போக போக நெருக்கமானார்கள். படப்பிடிப்பு முடிந்து அமிலண்டன் திரும்பிய பிறகும் பழக்கம் நீடிக்கிறது. இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசுகிறார்கள்.
இருவரும் காதலிப்பது உறுதி என்று “மதராச பட்டிணம்” படக்குழுவினர் முணுமுணுக்கின்றனர்.
இதுபற்றி ஆர்யாவிடம் கேட்டபோது அவர் கூறிய தாவது:-
அமியும், நானும் நண்பர்களாக பழகுகிறோம். அவர் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பது உண்மைதான். இந்த வாரம் இறுதியில் அமி சென்னை வருகிறார். அவரை அழைத்து போய் இப்போதைய சென்னையை சுற்றி காட்டுவேன்.
இவ்வாறு ஆர்யா கூறினார்.
Friday, July 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)