ஹன்சிகா மோத்வானி, இலியானா, சமந்தா என புது வரவுகள் பல தமிழை கலக்கவுள்ளன. இந்த புது வரவுகள் தமன்னா போன்ற இங்குள்ள முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக உருவெடுக்கும் என்பது கோடம்பாக்க ஜோசியர்களின் கணிப்பு.
ஆனால் இவர்கள் அனைவரையும்விட வேறொரு நடிகையைதான் அனைவரும் ஆர்வமுடன் கவனிக்கிறார்கள். அவர், டாப்ஸி, ஆடுகளம் படத்தின் ஹீரோயின்.
டெல்லி மாடலான டாப்ஸி ஆடுகளத்தில் த்ரிஷாவுக்குப் பதில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர். தமிழுக்கு புதுமுகம் என்றாலும் தெலுங்குக்கு இவர் பழகிய முகம். முதல் படம் ஆடுகளம் வெளிவரும் முன்பே ஜீவா நடிக்கும் வந்தான் வென்றான் படத்தில் ஹீரோயினாக டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
வந்தான் வென்றானை ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களை இயக்கிய கண்ணன் இயக்குகிறார். பெயரை வந்தாள் வென்றாள் என்று வைத்தாலும் தப்பில்லை
Friday, July 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)