நடிகை அசின் இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றது சர்ச் சையை கிளப்பியது. ராஜபக்சே மனைவியுடன் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற தமிழர் பகுதிகளுக்கு சென்றது திரைப்பட அமைப்பினருக்கு மேலும் ஆத்திரமூட்டியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டன.
நடிகர் சங்க பொதுக்குழுவில் அசின் விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. ராதாரவி, சத்யராஜ் இருவரும் அசின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இனிமேல் நடிகர்-நடிகைகள் இலங்கை செல்வதாக இருந்தால் நடிகர் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு அசின் பதில் அளித்த போது மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியதாக செய்திகள் வெளியாயின. அசின் ஆணவமாக பேசுவதாக நடிகர் சங்க நிர்வாகிகள் ஆத்திரப்பட்டனர்.
இதற்கு அசின் விளக்கம் அளித்துள்ளார். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லவில்லை என்றும் நான் சொல்லா ததை செய்தியாக வெளியிட்டு என் மீது அவதூறு பரப்பியுள்ளனர் என்றும் ஆவேசப்பட்டார். அசின் கூறியதாவது:-
நடிகர் சங்க பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் என் கவனத்துக்கு வந்தன. அந்த தீர்மானங்களை மனதார வரவேற்கிறேன்.
நான் ஒரு நடிகை தொழில் ரீதியாகத்தான் இலங்கை சென்றேன். நடிகர் சங்கத்தலைவரிடம் எனது நிலைப்பற்றி ஏற்கனவே விளக்கி விட்டேன். இலங்கை சென்றதற்காக என்னை பலர் விமர்சித்தனர். நடிகர் சங்க பொதுக்குழுவில் தனிப்பட்ட முறையில் இலங்கை செல்லும் கலைஞர்களை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது என்று தீர்மானம் போட்டது ஆறுதலாக உள்ளது. இனிமேல் இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் நடிகர் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். இனி நடிகர் சங்கத்தின் அனுமதி இல்லாமல் இலங்கை செல்ல மாட்டேன்.
நடிகர் சங்கத்தினரை எதிர்ப்பது போல் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லாததை செய்தியாக வெளியிடுவது முறையல்ல.
இவ்வாறு அசின் கூறினார்.
Tuesday, July 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)