Pages

Tuesday, July 27, 2010

கணவனை பிரிந்திருக்கும் திரை உலக நடிகைகளின் வாழ்க்கை

0 comments
 
திரையுலகில் திருமண முறிவுகள் பெருகி விட்டன. பல கதாநாயகிகளின் மண வாழ்க்கை விவாகரத்துகளிலேயே முடிகின்றன. திரையில் ரசிகர்களை மகிழ வைத்த அவர்களின் நிஜவாழ்க்கை பரிதாபத்தில் நிற்கிறது. ஓரிரு வருடங்களிலேயே கணவனும், மனைவியும் இல்லறம் கசந்து பிரிவதுதான் இதில் விசேஷம்.

சமீபத்தில் விவாகரத்து பட்டியலில் சோனியா அகர்வால், லலிதகுமாரி, சரிதா, ஊர்வசி, சுகன்யா என பலர் உள்ளனர். காவ்யா மாதவன், மீராவாசுதேவன் ஆகியோரும் இப்பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

ஏற்கனவே கதாநாயகிகளாக கொடிகட்டி பறந்த நளினி, சீதா, அம்பிகா, மோகினி போன்றோரும் மணவாழ்க்கையில் முறிவு கண்டு நிற்கிறார்கள்.

இதில் சில நடிகைகளை திரையுலகில் இருப்பவர்களே மணந்து சில மாதங்களில் கழற்றி விட்டுள்ளனர். சோனியா அகர்வாலை இயக்குனர் செல்வராகவன் திருமணம் செய்தார். இவர்கள் பிரிவுக்கு நடிகை ஆண்ட்ரியா காரணம் என சொல்லப்பட்டது. செல்வராகவனும், ஆண்ட்ரியாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

லலிதகுமாரியின் கணவர் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். இந்திப்படங்களில் பிரபலமாக உள்ள பெண் டான்ஸ் மாஸ்டருடன் பிரகாஷ் ராஜுக்கு நெருக்கம் ஏற்பட லலிதகுமாரியை கழற்றி விட்டார்.

மீராவாசுதேவனை திருமணம் செய்தவர் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷால்அகர்வால். 2005-ல் நடந்த இவர்கள் திருமணம் நேற்று விவாகரத்தில் முடிந்தது.

காவ்யா மாதவனுக்கும் குவைத்தில் தொழில் அதிபராக உள்ள நிக்சல் சந்திரனுக்கும், கடந்த 2009 பிப்ரவரி மாதம்தான் திருமணம் முடிந்தது. ஒன்றரை வருடத்திலேயே கணவனும், அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்துவதாக சொல்லி விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்.

சுகன்யாவுக்கு 2002-ல் திருமணம் நடந்தது. இப்போது விவாகரத்து கேட்கிறார். ஊர்வசியின் கணவர் மனோஜ் கே.ஜெயன் பிரபல மலையாள நடிகர். இதுபோல் சரிதாவின் கணவர் முகேஷீம் பிரபல நடிகர். இந்த ஜோடிகளும் பிரிந்துள்ளனர்.

மேலும் பல நடிகைகள் மண வாழ்விலும் புயல் வீசுவதாகவும், விரைவில் கோர்ட்டு படியேறுவார்கள் என்றும் கிசுகிசுக்கள் வருகிறது.

குறிப்பாக நித்யானந்தாவுடன் படுக்கை அறை வீடியோவில் வந்த ரஞ்சிதாவை கணவரும், அவரது குடும்பத்தினரும் ஒதுக்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அனுஹாசன், ஸ்ருதி, பாபிலோனோ, மோகினி போன்றோரும் கணவன் மாரை பிரிந்துள்ளனர்.

Leave a Reply