Pages

Saturday, July 31, 2010

நடிகர் கார்த்தி நான் மகான் அல்ல ரிலீசுக்காக காத்திருக்கிறார்

0 comments
 
இளம் பெண்களின் மனம் கவர்ந்த ஹீரோவாக கோலிவுட்டில் வலம் வரும் நடிகர் கார்த்தி, தனது நான் மகான் அல்ல படத்தின் ரிலீசை மிக ஆர்வமாக எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். கடந்த வாரம் வெளியிடப்பட்ட இப்படத்தின் பாடல்கள் தற்போது விற்பனையில் டாப் லிஸ்ட்டை எட்டி உள்ளது. நான் மகான் அல்ல படத்தின் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுசீந்திரன் இயக்கி‌ உள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இப்படம் பற்றி கூறிய கார்த்தி, நான் மகான் அல்ல படம் உண்மை ‌சம்பவத்தை மையமாக கொண்டது; இது டைரக்டர் சுசீந்திரனின் உறவினர் ஒருவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது; சென்னையின் மாறுபட்ட பக்கத்தை பெரிய திரையில் காட்டக் கூடியதாக இப்படம் அமைந்துள்ளது; தமிழ் சினிமாவில் எடுக்கப்படாத புதிய முயற்சி என்றே இப்படத்தை சொல்லலாம்; அதனாலேயே இப்படத்தின் ரிலீசை மிகவும் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு கார்த்தி தெரிவித்தார்.
Readmore...

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுக்கிறார் நயன்தாரா

0 comments
 
பிரபுதேவா காதலால் நயன்தாராவிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்ய வரும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலுமே முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துள்ளார். சம்பளம் ரூ.1 கோடிக்கு மேல் வாங்குகிறார். உச்ச நிலையில் இருந்த அவரை காதல் பிரச்சினை தடுமாற வைத்துள்ளது.

“வில்லு” படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் பிரபுதேவா மனைவி ரம்லத் எதிர்ப்பால் அந்த திட்டத்தை தள்ளி போட்டனர்.

தற்போது இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் நட்சத்திர ஓட்டல்களில் தனி குடித்தனம் நடத்துவதாகவும் கிசு கிசுக்கள் பரவியுள்ளன. அதை மெய்ப்பிப்பது போலவே நயன்தாராவின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் தெரிகிறது.
முன்பெல்லாம் வந்த படங்களையெல்லாம் ஒப்பு கொண்டார். கவர்ச்சிக்கும் தயங்குவது இல்லை. “பில்லா” படத்தில் நீச்சல் உடையில் தோன்றி பரபரப்பு ஏற்படுத்தினார். தெலுங்கு படங்களிலும் அரை குறை ஆடையுடன் துணிச்சலாக நடித்தார். ஆனால் இப்போது அதுபோன்ற அணுகுமுறைகள் அவரிடம் இல்லை. முதல் நிபந்தனையாக கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுக்கிறாராம். ஆர்யா ஜோடியாக நடித்த “பாஸ் என்கிற பாஸ்கரன்” படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் பாடல் காட்சிகளில் கூட கவர்ச்சி காட்ட மறுத்தாராம்.

கன்னடத்தில் ரூ.1 கோடி சம்பளத்தில் சிவராஜ்குமார் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதை மறுத்து விட்டார். இந்த படத்தை ஒதுக்குவதற்கு பிரபுதேவாதான் காரணம் என்கின்றனர். புதுப்படங்களில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டு வருகிறார். பிரபுதேவாவின் அனைத்து செலவுகளையும் நயன்தாராவே கவனித்துக் கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பண கஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். பாங்கியில் போட்டு வைத்து தொகை கரைந்து போனதால் விளம்பர படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
Readmore...
Friday, July 30, 2010

வேலாயுதம் திரைபடத்தின் கதை

0 comments
 
வேலாயுதம் படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் படத்தின் பரபரக்கும் கதை என்ன? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. முதன் முதலாக டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா ஆகியோர் நடிக்கிறார்கள். கதைப்படி, தமிழ்நாட்டில் இருக்கும் ஏழுகோடி பேர்களில் ஒருவனாக இருக்கும் விஜய், அந்த ஏழுகோடி மக்களுக்கும் ரியல் சூப்பர் ஹீரோவாக விஸ்வரூபம் எடுப்பாராம். அணு அளவுக்கு சிறியவனாக இருக்கும் நாயக‌னை, வில்லன் கூட்டம் சீண்டிப் பார்க்கும்‌போது அவன் தீய சக்திகளுக்கு எதிரான அணு ஆயுதமாக எப்படி மாறுகிறான் என்பது விறுவிறுப்பான கதையாம். அறிமுக நாயகி ஹன்சிகா மோத்வானி பாவாடை தாவணியில் நடிக்கவுள்ளார், என்று சொல்லும் ‌படத்தின் டைரக்டர் ஜெயம்ராஜா, இந்த படம் எம்ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படம் மாதிரியான விறுவிறுப்பு மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும், என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.அப்படினா இதுவும் ரீமேக் படம்தானா?. பயப்பட வேண்டாம் இது அவரோட சொந்த படம்னு நம்புவோம்
Readmore...

பில்லா-2 திரைபடத்தில் புதிய ஸ்டைலில் தோன்றுகிறார் அஜித்

0 comments
 
ரஜினி நடித்து வெற்றி கரமாக ஓடிய “பில்லா” படம் அஜீத் நயன்தாரா ஜோடியாக நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் பழைய “மைநேம் இஸ் பில்லா”, “வெத்தலையை போட் டேன்டி” போன்ற பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இருந்தன.

பிரபு, நமீதா போன் றோரும் நடித்தனர். விஷ்ணு வர்த்தன் இயக்கினார். கடந்த 2008-ல் இப்படம் ரிலீசானது.

தற்போது “பில்லா” படத்தின் 2-ம் பாகத்தை படமாக்கவும் முடிவு செய்துள்ளனர். அஜீத்தே இதிலும் நடிக்கிறார். விஷ்ணு வர்த்தன் இயக்குகிறார். படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்குகிறது.

இதுபற்றி விஷ்ணு வர்த்தன் கூறும்போது, பில்லா-2” படத்துக்கான கதை தயாராகி விட்டது. இக்காலத்து இளைஞர்களை கவனத்தில் கொண்டு கதையை உருவாக்கியுள்ளோம். எல்லோருக்கும் பிடிக்கும்.

இப்படத்தில் அஜீத் புதிய ஸ்டைலில் தோன்றுவார் என்றார்.

இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
Readmore...

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்

1 comments
 
Super Hit videos online watch: Happy friendship day: "Dear Friend, Give thousand chances to your enemy to become your friend, But don ' t give a single chance to your friend to b..."
Readmore...
Tuesday, July 27, 2010

கணவனை பிரிந்திருக்கும் திரை உலக நடிகைகளின் வாழ்க்கை

0 comments
 
திரையுலகில் திருமண முறிவுகள் பெருகி விட்டன. பல கதாநாயகிகளின் மண வாழ்க்கை விவாகரத்துகளிலேயே முடிகின்றன. திரையில் ரசிகர்களை மகிழ வைத்த அவர்களின் நிஜவாழ்க்கை பரிதாபத்தில் நிற்கிறது. ஓரிரு வருடங்களிலேயே கணவனும், மனைவியும் இல்லறம் கசந்து பிரிவதுதான் இதில் விசேஷம்.

சமீபத்தில் விவாகரத்து பட்டியலில் சோனியா அகர்வால், லலிதகுமாரி, சரிதா, ஊர்வசி, சுகன்யா என பலர் உள்ளனர். காவ்யா மாதவன், மீராவாசுதேவன் ஆகியோரும் இப்பட்டியலில் சேர்ந்துள்ளனர்.

ஏற்கனவே கதாநாயகிகளாக கொடிகட்டி பறந்த நளினி, சீதா, அம்பிகா, மோகினி போன்றோரும் மணவாழ்க்கையில் முறிவு கண்டு நிற்கிறார்கள்.

இதில் சில நடிகைகளை திரையுலகில் இருப்பவர்களே மணந்து சில மாதங்களில் கழற்றி விட்டுள்ளனர். சோனியா அகர்வாலை இயக்குனர் செல்வராகவன் திருமணம் செய்தார். இவர்கள் பிரிவுக்கு நடிகை ஆண்ட்ரியா காரணம் என சொல்லப்பட்டது. செல்வராகவனும், ஆண்ட்ரியாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

லலிதகுமாரியின் கணவர் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். இந்திப்படங்களில் பிரபலமாக உள்ள பெண் டான்ஸ் மாஸ்டருடன் பிரகாஷ் ராஜுக்கு நெருக்கம் ஏற்பட லலிதகுமாரியை கழற்றி விட்டார்.

மீராவாசுதேவனை திருமணம் செய்தவர் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷால்அகர்வால். 2005-ல் நடந்த இவர்கள் திருமணம் நேற்று விவாகரத்தில் முடிந்தது.

காவ்யா மாதவனுக்கும் குவைத்தில் தொழில் அதிபராக உள்ள நிக்சல் சந்திரனுக்கும், கடந்த 2009 பிப்ரவரி மாதம்தான் திருமணம் முடிந்தது. ஒன்றரை வருடத்திலேயே கணவனும், அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்துவதாக சொல்லி விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளார்.

சுகன்யாவுக்கு 2002-ல் திருமணம் நடந்தது. இப்போது விவாகரத்து கேட்கிறார். ஊர்வசியின் கணவர் மனோஜ் கே.ஜெயன் பிரபல மலையாள நடிகர். இதுபோல் சரிதாவின் கணவர் முகேஷீம் பிரபல நடிகர். இந்த ஜோடிகளும் பிரிந்துள்ளனர்.

மேலும் பல நடிகைகள் மண வாழ்விலும் புயல் வீசுவதாகவும், விரைவில் கோர்ட்டு படியேறுவார்கள் என்றும் கிசுகிசுக்கள் வருகிறது.

குறிப்பாக நித்யானந்தாவுடன் படுக்கை அறை வீடியோவில் வந்த ரஞ்சிதாவை கணவரும், அவரது குடும்பத்தினரும் ஒதுக்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அனுஹாசன், ஸ்ருதி, பாபிலோனோ, மோகினி போன்றோரும் கணவன் மாரை பிரிந்துள்ளனர்.
Readmore...

அசின்: நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லவில்லை

0 comments
 
நடிகை அசின் இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றது சர்ச் சையை கிளப்பியது. ராஜபக்சே மனைவியுடன் யாழ்ப்பாணம், வவுனியா போன்ற தமிழர் பகுதிகளுக்கு சென்றது திரைப்பட அமைப்பினருக்கு மேலும் ஆத்திரமூட்டியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டன.

நடிகர் சங்க பொதுக்குழுவில் அசின் விவகாரம் பற்றி விவாதிக்கப்பட்டது. ராதாரவி, சத்யராஜ் இருவரும் அசின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இனிமேல் நடிகர்-நடிகைகள் இலங்கை செல்வதாக இருந்தால் நடிகர் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு அசின் பதில் அளித்த போது மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியதாக செய்திகள் வெளியாயின. அசின் ஆணவமாக பேசுவதாக நடிகர் சங்க நிர்வாகிகள் ஆத்திரப்பட்டனர்.

இதற்கு அசின் விளக்கம் அளித்துள்ளார். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லவில்லை என்றும் நான் சொல்லா ததை செய்தியாக வெளியிட்டு என் மீது அவதூறு பரப்பியுள்ளனர் என்றும் ஆவேசப்பட்டார். அசின் கூறியதாவது:-

நடிகர் சங்க பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் என் கவனத்துக்கு வந்தன. அந்த தீர்மானங்களை மனதார வரவேற்கிறேன்.

நான் ஒரு நடிகை தொழில் ரீதியாகத்தான் இலங்கை சென்றேன். நடிகர் சங்கத்தலைவரிடம் எனது நிலைப்பற்றி ஏற்கனவே விளக்கி விட்டேன். இலங்கை சென்றதற்காக என்னை பலர் விமர்சித்தனர். நடிகர் சங்க பொதுக்குழுவில் தனிப்பட்ட முறையில் இலங்கை செல்லும் கலைஞர்களை மிரட்டுவது கண்டிக்கத்தக்கது என்று தீர்மானம் போட்டது ஆறுதலாக உள்ளது. இனிமேல் இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் நடிகர் சங்கத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன். இனி நடிகர் சங்கத்தின் அனுமதி இல்லாமல் இலங்கை செல்ல மாட்டேன்.

நடிகர் சங்கத்தினரை எதிர்ப்பது போல் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நான் சொல்லாததை செய்தியாக வெளியிடுவது முறையல்ல.

இவ்வாறு அசின் கூறினார்.
Readmore...
Friday, July 23, 2010

இணையத் தளத்தில் பரவும் நடிகையின் செக்ஸ் காட்சிகள் “அது நான் அல்ல”-காத்ரீனா கைப் மறுப்பு

1 comments
 
அவர் பல ஆண்களுடன் படுக்கையில் ஆபாசமாக இருக்கும் படம் இணையத்தளம் ஒன்றில் இடம் பெற்றிருப்பதாக சில தினங்களுக்கு முன்பு மும்பையில் தகவல் பரவியது.

மும்பை நகர ரசிகர்கள் போட்டிப்போட்டு இணையத்தள மையங்களுக்கு சென்று அந்த வெப்சைட்டில் ஓடும் ஆபாச காட்சிகளைப்பார்த்தனர். சில நிமிடங்கள் ஓடும் அந்த படத்தில் ஒரு இளம் பெண் ஒவ்வொரு ஆடையாக கழற்றி வீசும் காட்சிகள் வருகிறது.

ஒரு கட்டத்தில் அந்த பெண் முழு நிர்வாணமாகி விடுகிறாள். ஆனால் அந்த பெண்ணின் முகம் கொஞ்சமே தெரிகிறது. 4 ஆண்களுடன் அந்த பெண் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் காட்சிகளுடன் அந்த படம் முடிகிறது.

ஆபாச காட்சிகளில் உள்ள பெண்ணின் முகம் ஒரு பக்க சாயலாகவே தெரிகிறது. அந்த பெண்ணின் முகம் மற்றும் உடல் அமைப்புகள் நடிகை காத்ரீனா கைப் போலவே இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காத்ரீனா தான் அந்த ஆபாச படத்தில் இருப்பதாக தகவல் பரவியது. வட மாநில ரசிகர்களிடம் கடந்த 3 தினங்களாக இந்த ஆபாச காட்சிகள் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. ஏராளமானவர்கள் அந்த இணையத்தளத்துக்கு சென்று ஆபாச காட்சிகளை டவுன்லோடு செய்து நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

இதற்கிடையே அந்த ஆபாச காட்சிகளை சிலர் வீடியோவாகவும் தயாரித்து விற்கிறார்கள். காத்ரீனா கைப் செக்ஸ் ஸ்கேண்டல் என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ள அந்த வீடியோ கேசட்டுக்களும் மும்முரமாக விற்கின்றன.

இது குறித்து நடிகை காத்ரீனா கைப்பை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

நீங்கள் குறிப்பிடும் வீடியோவை நானும் பார்த்தேன். முழுமையாக பார்க்க முடியாத அளவுக்கு அந்த காட்சிகள் அருவருப்பாக உள்ளது.

அந்த காட்சிகளில் இருக்கும் பெண் என்னைப் போல இருப்பதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் கூட அப்படித்தான் நினைத்து என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். ஆனால் உண்மையில் அந்த பெண் நான் அல்ல.

அந்த பெண்ணின் முகம் வேறு மாதிரியாக உள்ளது. கொஞ்சம் கூட என் சாயல் போல அந்த பெண் இல்லை. வேண்டும் என்றே யாரோ பொறாமை பிடித்தவர்கள் இந்த ஆபாச காட்சிகளுடன் என் பெயரை சேர்த்து விட்டனர். இது அநாகரீகமானது.

இவ்வாறு நடிகை காத்ரீனா கைப் கூறினார்.
Readmore...

ஹிந்தியில் கவர்ச்சியாக நடிக்க தயார் என த்ரிஷா சொல்கிறார்

0 comments
 
இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று திரிஷா கூறினார்.

அக்ஷய்குமாருடன் ஜோடி சேர்ந்த காட்டா மீட்டா படம் இன்று ரிலீசானது. இதில் முழுக்க புடவை கட்டி வருகிறார்.

இந்தியில் குடும்ப பாங்கான வேடத்தில் தான் நடிப்பீர்களா என்று கேட்ட போது மறுத்தார். திரிஷா கூறியதாவது:-

காட்டா மீட்டா படத்தில் எனக்கு மாநகராட்சி கமிஷனர் வேடம். எனவே தான் புடவையில் வந்தேன். ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி ஆடையுடன் ஆடி யுள்ளேன். இந்திப்படங்களில் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன்.

காட்டா மீட்டா படத்தில் விளம்பர பணிகளில் பங்கேற்க மன்மதன் அம்பு படத்தை இடையில் நிறுத்திவிட்டு மும்பை திரும்பியுள்ளேன். டி.வி. நிகழ்ச்சிகளில் அக்ஷய் குமாருடன் சேர்ந்து பங்கேற் கிறேன். 25-ந்தேதி மீண்டும் மன்மதன் அம்பு படப் பிடிப்புக்காக செல்கிறேன்.

இவ்வாறு திரிஷா கூறினார்.

மும்பையில் இன்று மாலை நடிகர், நடிகைகளுக்காக காட்டா மீட்டா படத்தின் சிறப்பு காட்சி திரையிடப் படுகிறது. இதில் திரிஷாவும் பங்கேற்கிறார்.

இப்படம் மூலமாக தனக்கு மேலும் இந்திப்பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறார்.
Readmore...

கிசு கிசு மதராசப்பட்டிணம் நாயகி நடிகை அமியுடன் ஆர்யா காதல்

0 comments
 
ஆர்யாவுக்கும் மதராச பட்டிணம் நாயகி அமிஜாக்சனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு பரவியுள்ளது.

அமிலண்டனைச் சேர்ந்தவர். இளம்பெண் களுக்காக அழகி போட்டியில் பட்டம் வென்றவர். அங்கு மாடலிங்தொழில் செய்து வருகிறார்.

“மதராசபட்டிணம்” படத்தில் ஆங்கில நடிகை தேவை என்பதற்காக இயக்குனர் விஜய் லண்டனில் முகாமிட்டு நிறைய போட்டோக்கள் பார்த்து அமியை தேர்வு செய்தார்.

படப்பிடிப்பில் முதல் சில நாட்கள் ஆர்யாவும், அமியும் அவ்வளவாக பேசிக் கொள்ளவில்லை. ஆனால் போக போக நெருக்கமானார்கள். படப்பிடிப்பு முடிந்து அமிலண்டன் திரும்பிய பிறகும் பழக்கம் நீடிக்கிறது. இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசுகிறார்கள்.

இருவரும் காதலிப்பது உறுதி என்று “மதராச பட்டிணம்” படக்குழுவினர் முணுமுணுக்கின்றனர்.

இதுபற்றி ஆர்யாவிடம் கேட்டபோது அவர் கூறிய தாவது:-

அமியும், நானும் நண்பர்களாக பழகுகிறோம். அவர் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பது உண்மைதான். இந்த வாரம் இறுதியில் அமி சென்னை வருகிறார். அவரை அழைத்து போய் இப்போதைய சென்னையை சுற்றி காட்டுவேன்.

இவ்வாறு ஆர்யா கூறினார்.
Readmore...
Friday, July 16, 2010

ஷங்கர் 3 இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

0 comments
 
இந்தியில் அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் படம் இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவிலே மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 2009ம் ஆண்டு இறுதியில் வெளியான இப்படம் மிகப் பெரும் லாபத்தை ஈட்டிக்கொடுத்தது. இப்படத்தில் மாதவனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. படத்தை ரீமேக் செய்யும் உரிமையை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இப்படத்தை ரீமேக் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எந்திரன் படத்தை சமீபத்தில் முடித்த ஷங்கர் 3 இடியட்ஸ் படத்தின் கதை விவாதத்தில் உள்ளதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் பவன் கல்யாண் இந்தியில் அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் யார் நடிப்பார் என்பது இன்னும் இழுபறியாக உள்ளது. இளைய தளபதி விஜய் அமீர்கான் கதாபாத்திரத்தில் நடிப்பார் என தெரிகிறது, தற்போது "அ" நடிகருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சீக்கிரமா யார் தான் நடிக்கிறாங்கன்னு சொல்லுங்கப்பா....
Readmore...

வம்சம் திரைபடத்தில் அசின்

0 comments
 
பாண்டிராஜ் இயக்கும் வம்சம் படத்தில் பசு மாட்டுக்கு அசின் பெயர் வைத்துள்ளனர். கதையில் முக்கிய பாத்திரமாக வரும் இந்த பசு மாட்டை படம் முழுக்க அசின் அசின் என்றே அழைக்கின்றனர்.

அசின் ஏற்கனவே இலங்கை படப் பிடிப்புக்கு போய் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பசு மாட்டுக்கு அசின் பெயரை வைத்திருப்பது அவரை அவமதிப்பதற்காக என்று இயக்குனர் பாண்டிராஜிடம் மாலை மலர் நிருபர் கேட்ட போது மறுத்தார், அவர் கூறியதாவது:-

வம்சம் படத்தில் பசுவுக்கு அசின் பெயர் வைத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. கிராமப்புறங்களில் ஆசையாக வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு அவரவருக்கு விருப்பமான நடிகர், நடிகைகள் பெயர்களை வைத்து அழைப்பதை பார்க்க முடியும். திரிஷா, அசின் என்றெல்லாம் நிறைய பேரின் பெயர்களை வைத்துள்ளனர். நாய்க் குட்டி, பூனைக்குட்டி, போன்றவற்றுக்கெல்லாம் இது போன்று பெயர்கள் வைத்துள்ளனர்.

அது மாதிரிதான் எனது வம்சம் படத்தின் நாயகி அவள் ஆசையாய்
வளர்க்கும் பசுவுக்கு அசினு என்று அழைப்பாள். காதலர்களுக்குள் தூது போவது போல் அந்த பசுவின் கேரக்டர்கள் சித்தரிக்கப்பட்டு உள்ளது.

பசுவுக்கு அசின் பெயர் வைத்ததில் எந்த உள் நோக்கமும் இல்லை. அவரை காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் இதை செய்யவில்லை. அசின் இந்த படத்தை பார்த்தால் பசு கேரக்டரை பார்த்து ரசிப்பார் சிரிப்பார்.

இவ்வாறு பாண்டிராஜ் கூறினார்.

வம்சம் படத்தில் அருள்நிதி நாயகனாகவும் சுனேனா நாயகியாகவும் நடிக்கின்றனர். இயக்குனர் பாண்டிராஜ் ஏற்கனவே பசங்க ஹிட்படத்தை டைரக்டு செய்தவர்.
Readmore...

மதராசபட்டினம் படத்தை குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்த முதல்வர் கருணாநிதி

0 comments
 
இயக்குனர் கிரீடம் விஜய் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மதராசபட்டினம் படத்தை முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்தார். ஆர்யா - எமி ஜாக்சன் நடித்துள்ள இப்படத்தில் சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்து காதலை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய். அதுவும் மதராசப்பட்டினத்து டோபிகானா பகுதியில் வசிக்கும் சலவைத் தொழிலாளி ஒருவருக்கும், அந்த மாகாணத்தையே ஆளும் ஆங்கிலேயே கவர்னரின் செல்ல மகளுக்குமிடையேயான காதல் கதை. அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றுள்ள இப்படத்தின் சிறப்பு காட்சியை முதல்வர் கருணாநிதி குடும்பத்துடன் கண்டுகளித்தார். படம் முடிந்ததும் இயக்குனர் விஜய், நாயகன் ஆர்யா உள்ளிட்ட குழுவினரை மனதார பாராட்டிய முதல்வர், பழைய சென்னையை தத்ரூபமாக காட்டியமைக்காக தனது மகிழ்ச்சியையும் தெரிவித்தார். மலரும் நினைவுகள்!
Readmore...
Monday, July 12, 2010

படபிடிப்பில் திடிரென மாயமான நடிகை த்ரிஷா

0 comments
 
கமல்ஹாசன்- திரிஷா ஜோடியாக நடிக்கும் `மன்மதன் அம்பு' படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது இத்தாலியில் நடைபெறுகிறது. கமல்ஹாசன்- திரிஷா நடித்த காட்சிகள், நடுக்கடலில் பிரமாண்டமான ஒரு கப்பலில் படமாக்கப்பட்டு வருகின்றன.

`டைட்டானிக்' கப்பல் போல் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் ஆடம்பரகப்பல் அது. உல்லாசப்பயணமாக பல கோடீஸ்வரர்கள் அந்தகப்பலில் பயணம் செய்து வருகிறார்கள். 18 அடுக்குகள் கொண்ட அந்த கப்பலில், ஒரு அடுக்கில் இருந்து இன்னொரு அடுக்குக்கு செல்ல `லிப்ட்' வசதிகள் உள்ளன. கூட்டத்தில்யாரும் காணாமல் போய்விடக்கூடாது என்பதற்காக, பட குழுவினரிடம் வரைபடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கப்பலின் ஒரு தளத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர், அடுத்த தளத்துக்கு காட்சிகள் மாற்றப்பட்டன. படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அடுத்த தளத்தை நோக்கி போய்க்கொண்டிருந்தபோது, திரிஷா திடீரென்று காணாமல் போனார்.

திரிஷாவுடன் அவருடைய தாயார் உமாவும் சென்று இருந்தார். மகளை காணாததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர்-நடிகைகளின் பாதுகாப்புக்காக அழைத்து சென்றிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் நாலாபுறமும் திரிஷாவை தேட ஆரம்பித்தார்கள்.

கப்பலில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு திரிஷாவை தேடி ஆட்கள் அனுப்பப்பட்டார்கள்.

2 மணி நேர தேடுதலுக்குப்பின், திரிஷா ஒரு `ஷாப்பிங்' சென்டரில் இருந்து மீட்கப்பட்டார். அவர் மீட்கப்பட்ட பிறகே தாயார் உமா சமாதானம் அடைந்தார்.

சென்னை திரும்பிய அவர், இதுபற்றி நிருபர்களிடம் கூறியதாவது:-

``டைட்டானிக் படத்தில் வருவது போல், மிக பிரமாண்டமான கப்பல் அது. ஒரு முனையில் இன்னொரு முனைக்கு செல்வதற்கு பல கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டும். கப்பல் முழுவதும் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. படப்பிடிப்பின்போது, `லொகேஷன்' மாற்றப்பட்டபோது கூட்டத்தில் திரிஷாவும், நானும் பிரிந்து விட்டோம்.

கப்பலில் செல்போன் வேலை செய்யாததால், திரிஷா எங்கே போனார்? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. நான் பயந்து போய்விட்டேன். பாதுகாப்பு அதிகாரிகள் நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால், படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பதற்றம் அடைந்து விட்டார்கள். திரிஷாவை பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக அழைத்து வந்த பிறகே எனக்கு போன உயிர் திரும்பி வந்தது.''

இவ்வாறு உமா கூறினார்.
Readmore...
Saturday, July 10, 2010

சிம்புவுடன் நடிக்க அனுஷ்கா மறுப்பு

0 comments
 
தெலுங்கில் வெளியாகியுள்ள படம் 'வேதம்'. இதில் பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார் அனுஷ்கா. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. தமிழில் சிம்பு ஹீரோவாக நடிப்பார் என தெரிகிறது. தெலுங்கில் நடித்த அதே வேடத்தை ஏற்குமாறு அனுஷ்காவிடம் பேசப்பட்டதாம். ஆனால் இதில் நடிக்க அனுஷ்கா மறுத்துவிட்டார். சிம்புவுக்கு ஜோடி என்பதால் அவர் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஏற்கெனவே சிம்பு – அனுஷ்கா காதல் என கிசு கிசு பரவியது. சிம்புவுடன் ஜோடி சேரும் நடிகைகள் அவருடன் இணைத்து பேசப்படுவதும் வழக்கம். இந்த காரணங் களால் இதில் அனுஷ்கா நடிக்க மறுத்திருப்பதாக கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன. எப்படியோ நமது அனுஷ்கா சிம்புவிடமிருந்து தப்பினார். அவர் இதற்க்கு முன் செய்த லீலைகள் நாம் அனைவரும் அறிந்ததே.
Readmore...

நயன்தாராவை போல இருக்கும் நடிகை மேக்னா

0 comments
 
கவிதாலயம் தயாரித்து, ஸெல்வன் டைரக்டு செய்த `கிருஷ்ணலீலை' படத்தில், ஜீவன் ஜோடியாக அறிமுகமானவர், மேக்னா. இவர், `வைதேகி காத்திருந்தாள்' பட கதாநாயகி பிரமிளா ஜோசாயின் மகள். `கிருஷ்ணலீலை' படம் திரைக்கு வர தாமதமான நிலையில், மேக்னா நடித்த இரண்டாவது படம் `காதல் சொல்ல வந்தேன்' விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய திரையுலக பிரபலங்கள் அனைவரும் மேக்னா, நயன்தாராவைப்போல் இருக்கிறார் என்று பாராட்டினார்கள்.

இதுபற்றி மேக்னாவிடம் கேட்கப்பட்டது. ``தோற்றத்தில் நயன்தாராவுடன் உங்களை ஒப்பிடுவதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?'' என்ற கேள்விக்கு, மேக்னா அளித்த பதில்:-

``எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். நான், நயன்தாரா மாதிரி இருக்கிறேனா? என்று எனக்கு தெரியாது. காதல் சொல்ல வந்தேன் படவிழாவில், சில டைரக்டர்கள்தான் அப்படி சொன்னார்கள். நயன்தாரா வளர்ந்த நடிகை. அழகான நடிகை. அவர் ஒரு `சூப்பர்ஸ்டாரினி.' அவருடன் என்னை இணைத்து பேசுவதில், எனக்கு சந்தோஷம்தான்.''

``நடிப்பிலும் நயன்தாராவை நீங்கள் பின்பற்றுவீர்களா?''

``நடிப்பில், எனக்கென்று ஒரு தனி பாணியை வைத்துக்கொள்ள விரும்புகிறேன். யாரையும் `காப்பி' அடிக்க மாட்டேன். நயன்தாராவின் நடிப்பு வேறு, என் நடிப்பு வேறாக இருக்கும்.''

``மேக்னா, நயன்தாரா சாயலில் இருக்கிறார் என்று பேசப்படுவது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் அவரிடம் இருந்து உங்களுக்கு மிரட்டல் வந்ததாகவும் கூறப்படுகிறதே, உண்மையா?''

``அப்படி மிரட்டல் எதுவும் வரவில்லை. நயன்தாரா மிக சிறந்த மனிதநேயம் உள்ளவர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர் ஒரு டீஸன்ட் ஆன ஆர்ட்டிஸ்ட். அப்படியெல்லாம் செய்ய மாட்டார். உண்மையில் நான், அவரை சந்தித்துப் பேசுவதில் ஆர்வமாக இருக்கிறேன்.''

``நயன்தாரா-பிரபுதேவா காதல் விவகாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?''

``அது, அவர்கள் சொந்த விஷயம். அடுத்தவர்களின் சொந்த விஷயம் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.''

இவ்வாறு மேக்னா கூறினார்.
 புகைபடத்திற்கு இங்கே அழுத்தவும் 
Readmore...

மறுபடியும் அவதார் திரைப்படம் புதுபொலிவுடன் வெளிவருகிறது

0 comments
 
பிரபல ஆலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய ஆங்கில சினிமா படம் அவதார். இது “3டி” என்ற முப்பரிமாணம் தொழில் நுட்பத்துடன் எடுக்கப்பட்டபடம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு பரபரப்பை யும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது. இப்படம் தொழில் நுட்பத்துக்காக பல ஆஸ்கார் விருதுகளையும் பெற்றது.
இந்த நிலையில் புதுப்பொலிவுடன் அவதார் சினிமா படம் மீண்டும் வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. படம் முழு வதும் “3டி” தொழில் நுட்பத் துடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படத்தின் நீளம் கருதி ஏற்கனவே நீக்கப்பட் டிருந்த 8 நிமிட நேர பிரமாண்ட காட்சிகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. முற்றிலும் “3டி” தொழில் நுட்பம் இருப்பதால் குறிப்பிட்ட சில தியேட்டர் களில் மட்டுமே இது திரையிடப்பட உள்ளது.
அவதார் படத்தில் வரும் ”பண்டோரா” கதா பாத்திரத்தை புதிய பிரமாண்டத்துடன் மீண்டும் பார்க்க வேண்டும் என்று உலக மக்கள் கருத்து தெரிவித் துள்ளனர். எனவே மீண்டும் “அவதார்” படத்தைரிலீஸ் செய்து இருப்பதாக டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் தெரி வித்துள்ளார்.
Readmore...

கவர்ச்சிக்கு மாறிய திரிஷா

2 comments
 
திரிஷா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். இந்தியில் அக்ஷய்குமார் ஜோடியாக நடிக்கும் “காட்டா மீட்டா” படத்திலும் கமலுடன் நடிக்கும் “மன்மதன் அம்பு” படத்திலும் இதுவரை இல்லாத அளவு கவர்ச்சியாக தோன்றுகிறாராம். அத்துடன் “மேக்சிம்” என்ற ஆங்கில பத்திரிகைக்கும் வயிறு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

தென் இந்திய நடிகைகளுக்கு கவர்ச்சியை விட அழகு கூடுதலாக இருக்கும். புடவை மாடர்ன் டிரெஸ் எல்லாம் பொருந்தும். இந்திப்படங்களில் தென்னிந்திய நடிகைகள் நிறைய பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ஏற்கனவே பாப்புலராக உள்ள நடிகைகள் திடீர் இந்தி திரையுலகுக்கு வருவது எளிதாக உள்ளது.

பொதுவாக காதல் காட்சிகளில் நடிப்பது என்பது கஷ்டமானது. படப்பிடிப்பு நடக்கும்போது சுற்றி நிறைய பேர் இருப்பார்கள். அவர்கள் முன்னால் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது சுலபமானது அல்ல. எனவே தான் காதல் சீன்களில் நடிப்பதற்கு நான் ஒரு எல்லை வைத்து இருக்கிறேன்.

பிரியதர்ஷன்தான் என்னை இந்திக்கு கொண்டு வந்தார். “லேசா லேசா” படத்தில் என்னை அறிமுகம் செய்த வரும் அவர்தான். அக்ஷய்குமார் ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கவர்ச்சி நடிகைகளாக கருதுவது கரீனாகபூரையும், ஏஞ்சலினா ஜோலியும்தான்.

ரஜினியும் கமலும் வெவ்வேறு துருவத்தில் திறமையானவர்கள். கமல் ஆரம்பத்தில் கடுமையாக தெரிவார். பழகியதும் ரொம்ப சகஜமாக ஆகி விடுவார். ரஜினி மக்களின் அபிமான கலைஞர்.
Readmore...
Friday, July 9, 2010

2012 படத்தின் இரண்டாவது பாகம்

0 comments
 
2012 படத்தில் இயற்கையின் சீற்றத்தால் உலகம் அழிவது காட்சிகளாக்கப்பட்டது. தற்போது “டிராகன் பால் எவல்யூசன்” என்ற ஹாலிவுட் படம் 2012 பாகம் 2 என்ற பெயரில் தமிழில் வருகிறது.

மந்திர தந்திர சக்திகள் ஒன்று சேர்ந்து உலகை அழிக்க முயற்சிக்கின்றன. கடவுளை எதிர்த்து 7 வினோ தங்கள் சேர்ந்து டிராகன் பாலை உருவாக்குகின்றன. அவற்றை ஒன்று சேர்த்து உலகை அழிக்க தீயசக்தி முயல்கிறது. அவற்றை மீட்டு உலகை காக்க நாயகன் எவ்வாறு போராடுகிறான் என்பது கிளைமாக்ஸ்.

ஜஸ்டின் சாட்டின் நாயகனாக நடிக்கிறார். ஜேம்ஸ் வோன் இயக்கி உள்ளார். செவன் ஸ்டார் இண்டர் நேஷனல் இப்படத்தை தமிழில் வெளியிடுகிறது.
Readmore...

பேய்கள் இருப்பது உண்மை என நம்பும் நடிகை

0 comments
 
தமிழகமெங்கும் இன்று ரிலீசான ஆனந்தபுரத்து வீடு பேய் படத்தில் நடித்துள்ளார் சாயாசிங். இதில் நாயகன் நந்தா. பிரபலமான “மர்மதேசம்” டி.வி. தொடரை இயக்கிய நாகா டைரக்டு செய்துள்ளார்.

சாயாசிங் ஏற்கனவே “திருடா திருடி”, “வல்லமை தாராயோ” படங்களில் நடித்துள்ளார்.

“ஆனந்தபுரத்து வீடு” பேய் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சாயாசிங் சொல்கிறார்.

இந்த படத்தின் கதை பிடித்ததால் உடனே ஒப்புக்கொண்டேன். இயக்குனர் நாகா திறமையானவர். புத்தி கூர்மை உள்ளவர். டி.வி. தொடர்கள் எடுத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

நந்தா தமிழ் பேசி நடிக்க எனக்கு உதவினார். இப்படம் திரில்லர் கதை. படம் பார்ப்பவர்களை சீட் நுனிக்கு வரவைக்கும். எனக்கு பேய் நம்பிக்கை உண்டு. உலகில் நல்லவைகளும், தீய சக்திகளும் இருக்கின்றன. கடவுள் இருக்கிறார் என்று எப்படி நம்புகிறேனோ அதுபோல் பேய்கள் உண்டு என்பதையும் நம்புகிறேன்.

இவ்வாறு சாயாசிங் கூறினார்.
Readmore...
Friday, July 2, 2010

கோலிவூட்டை கலக்கும் புதிய நாயகி டாப்ஸி

0 comments
 
ஹன்சிகா மோத்வானி, இலியானா, சமந்தா என புது வரவுகள் பல தமிழை கலக்கவுள்ளன. இந்த புது வரவுகள் தமன்னா போன்ற இங்குள்ள முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக உருவெடுக்கும் என்பது கோடம்பாக்க ஜோ‌‌சிய‌ர்களின் கணிப்பு.

ஆனால் இவர்கள் அனைவரையும்விட வேறொரு நடிகையைதான் அனைவரும் ஆர்வமுடன் கவனிக்கிறார்கள். அவர், டாப்ஸி, ஆடுகளம் படத்தின் ஹீரோயின்.

டெல்லி மாடலான டாப்ஸி ஆடுகளத்தில் த்‌ரிஷாவுக்குப் பதில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர். தமிழுக்கு புதுமுகம் என்றாலும் தெலுங்குக்கு இவர் பழகிய முகம். முதல் படம் ஆடுகளம் வெளிவரும் முன்பே ‌‌ஜீவா நடிக்கும் வந்தான் வென்றான் படத்தில் ஹீரோயினாக டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

வந்தான் வென்றானை ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களை இயக்கிய கண்ணன் இயக்குகிறார். பெயரை வந்தாள் வென்றாள் என்று வைத்தாலும் தப்பில்லை
Readmore...

தலையுடன் ஜோடி சேரும் அழகான அனுஷ்கா

0 comments
 
அ‌‌‌‌ஜீத்தை நடிப்பில் கௌதம் இயக்கும் படம் கைவிட்பட்ட நிலையில் நாம் ஏற்கனவே கூறியபடி கௌதம் இடத்தை வெங்கட்பிரபு பிடித்துக் கொண்டுள்ளார். அ‌‌‌‌ஜீத் பட வாய்ப்புக்காக பிரேம்‌‌‌‌ஜீ, சிவா நடிப்பில் உருவாகவிருந்த பூச்சாண்டி படத்தையும் தள்ளி வைத்துள்ளார் வெங்கட்பிரபு.

தயாநிதி அழகி‌‌ரி தயா‌‌ரிக்கும் இந்தப் படத்தில் அ‌‌‌‌ஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். அனுஷ்காவின் ‌‌ரிஎன்ட்‌‌ரியான வேட்டைக்காரன் காலை வா‌‌ரினாலும் சிங்கம் அனுஷ்காவுக்கு எக்கச்சக்கமாக கை கொடுத்துள்ளது.

இதன் காரணமாகவே வெங்கட்பிரபுவின்; படத்தில் அ‌‌‌‌ஜீத் ஜோடியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு அனேகமாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கலாம்.
Readmore...
Thursday, July 1, 2010

அஜீத்தின் 50-வது படம் மும்பை தாதாக்கள் பற்றிய கதை

0 comments
 
அஜீத் 50-வது படத்துக்கு தயாராகிறார். முந்தைய “அசல்” படத்தை விட அழுத்தமான கதையம்சம் உள்ள படமாக 50-வது படம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.
இந்த படத்தை கவுதம் இயக்குகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கவுதமுக்கு பதில் வெங்கட்பிரபு இயக்குவார் என பெயர் அடிபடுகிறது.
சமீபத்தில் அஜீத்தும் வெங்கட்பிரபுவும் சந்தித்து பேசினர். அப்போது தன்னிடமிருந்த கதையொன்றை அஜீத்திடம் கூறினார். மும்பை தாதாக்களை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்து அம்சங்களும் இருந்ததாம். அஜீத்துக்கு கதை ரொம்ப பிடித்து போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் அவர் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் அஜீத்தின் 50-வது படத்தை இயக்கும் வாய்ப்பு வெங்கட்பிரபுக்கு போகிறது. இவர் ஏற்கனவே சென்னை 28 என்ற ஹிட் படத்தை எடுத்து பிரபலமானார். அவர் இயக்கிய சரோஜா படமும் வெற்றிகரமாக ஓடியது.
அஜீத்தின் 50-வது படத்தை தமிழ், தெலுங்கில் இயக்க முடிவு செய்துள்ளாராம். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவையும் இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடக்கிறது.
Readmore...
Wednesday, June 30, 2010

உடல் எடை குறைக்கும் லட்சுமிராய்

0 comments
 
ஏற்கனவே சாதா காற்றில் பறக்கும் சருகு போலதான் இருக்கிறார் த்‌ரிஷா. இருந்தும் இந்தியில் நடிப்பதால் யோகா, உடல்பயிற்சி என்று உடம்பை மேலும் இளைக்க வைத்திருக்கிறார். பாலிவுட் ரசிகர்களுக்கு சைஸ் ஸீரோ உடம்புதான் பிடிக்கும் என்பதால் இந்த கடும் இளைப்பு.

த்‌ரிஷா நிலையே இப்படியென்றால் லட்சுமிராயின் நிலை? கேள்வியே வேண்டாம், பல பத்து கிலோக்கள் அவர் குறைத்தாக வேண்டும்.

இந்திப் படங்களில் நடிப்பதற்காக மும்பையில் வீடு வாங்கியவர் அப்படியே உடல் இளைப்பதற்கான வேலைகளையும் தொடங்கியிருக்கிறார். தமிழில் காஞ்சனா படத்தை முடித்தால் வேறு கமிட்டெண்ட்கள் எதுவும் லட்சுமிராய்க்கு இல்லை. இந்தி ஒன்றுதான் அவரது ஒரே குறிக்கோள்.

சீக்கிரம் போட்டோசெஷன் நடத்தி பாலிவுட் நட்சத்திரங்களை கலங்கடிக்கப் போகிறாராம்.

அப்படியே எங்களையும் கொஞ்சம் கலங்கடிங்க மேடம்.
Readmore...

ரத்த ச‌ரித்திரம் ஒரு பக்கம் பஞ்சாயத்து இன்னொரு பக்கம் எகிறுது கலக்சன்

0 comments
 
விவேக் ஓபராய் நடித்திருப்பதால் ரத்த ச‌ரித்திரம் படத்தை தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வெளியிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர் சிலர்.

தீவிரமாக இருக்க வேண்டிய சீமானோ, தம்பி சூர்யாவுக்காக விவேக் ஓபராயை மன்னிப்பதாக பேட்டி கொடுத்து திடீர் பாதி‌ரியாகியிருக்கிறார். சீமானின் கருணையின் பெருவெள்ளம் ராஜபக்சேயை தீண்டி திருநிலைப்படுத்தினாலும் ஆச்ச‌ரியமில்லை.

இந்த‌க் குழப்படிகள் ஒருபுறமிருக்க, ரத்த ச‌ரித்திரத்தை வாங்குவதில் ஒரு போட்டியே நடக்கிறது. குறிப்பாக படத்தின் வெளிநாட்டு விநியோக உ‌ரிமைக்கு.

இங்கிலாந்து, அமெ‌ரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கான விநியோக உ‌ரிமை 4.5 கோடிக்கு விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. சூர்யா நடித்த ஒரு படம் இத்தனை அதிக விலைக்கு விற்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore...
Monday, June 28, 2010

அனுஷ்காவுக்கு விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு

0 comments
 
தெலுங்கு படம் ஒன்றில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பூனாவில் நடக்கிறது.

மகேஷ்பாபுடன் அனுஷ்கா நடிக்கும் பாடல் காட்சிகளை பூனாவில் படமாக்கி வருகின்றனர். "சிங்கம்' படத்துக்குப் பின் தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தாலும், நல்ல கதைகளையே தேர்வு செய்து நடிக்க அனுஷ்கா விரும்புவதாக அவரது தரப்பு தெரிவிக்கிறது.

பூபதி பாண்டியன் இயக்கும் "வெடி' படத்துக்கு அனுஷ்காவை நாயகியாக்க பேச்சு நடக்கிறது. இதில் ஹீரோவாக விக்ரம் நடிக்கிறார். விக்ரமின் ஜோடியாக இலியானாவுக்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், அவரின் கால்ஷீட் பிரச்னை அனுஷ்காவுக்கு சாதகமாக அமையும் என்கிறார்கள். தமன்னாவிடமும் பேச்சு நடக்கிறது.
Readmore...
Saturday, June 26, 2010

காமசூத்ரா விளம்பரத்தில் நடித்த இந்தி நடிகை தற்கொலை

0 comments
 
மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி விவேகா பானர்ஜி. இவர் 2000 ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை முன்னணி மாடல் அழகியாக இருந்தார். ஏராளமான விளம்பர படங்களிலும், சில இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த காமசூத்ரா விளம்பர படம் பிரபலமானது. யா கெய்சி மொகாபத் ஹை என்ற இந்திப் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மொரீசிஸ் நாட்டில் விவேகா பல ஆண்டு காலம் தங்கி இருந்தார். அதன் பிறகு மும்பை திரும்பி தனியாக வசித்து வந்தார்.

மொரீசிஸ் நாட்டில் விவேகா பல ஆண்டு காலம் தங்கி இருந்தார். அதன் பிறகு மும்பை திரும்பி தனியாக வசித்து வந்தார்.

கார் அப்பார்ட் மென்ட்டில் தங்கி இருந்தார். நேற்று அவர் தங்கி இருந்த வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகப்பட்டு போலீசுக்கு தகவல் கொடுத் தனர்.

உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு அவர் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார். சமீப காலமாக விவேகா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Readmore...

மணிரத்னம் அமிதாப் பஞ்சாயத்து

0 comments
 
ராவணன் திரைக்கு வந்து சில நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அதன் வசூல் இந்தியாவிலும் சரி வெளிநாடுகளிலும் சரி அத்தனை திருப்திகரமாக இல்லை என்ற பேச்சு எழுந்துள்ளது.

இதற்கு நடுவில் அமிதாப் தனது வலைப்பூவில் ராவணன் படம் குறித்தும், அபிஷேக் பச்சனின் காட்சிகள் சரிவர எடிட் செய்யப்படாதது குறித்தும் காரமாக விமர்சித்துள்ளார்.

மணி அதற்குப் பதிலடியாக அமிதாப்பிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக நான் சினிமாவுக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். அடுத்து இதற்கு பதிலாக அமிதாப் பெருசு ஏதாவது சொல்லாமல் இருக்கவேண்டும். இல்லாவிட்டால், மணியும் அமிதாப்பும் ராம ராவணர்களாகி சொல்லம்புகளைப் பொழிந்து கொண்டிருந்தால் நன்றாகவா இருக்கும்.
Readmore...

கார்த்தி: தமன்னாவை விட காஜல் அகர்வால் சிறந்தவர்

0 comments
 
நடிகர் கார்த்தி - நடிகை காஜல் அகர்வால் ஜோடி நடித்திருக்கும் புதிய படம் நான் மகான் அல்ல. இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நாயகன் கார்த்தி, டைரக்டர் சுசீந்திரன், தயாரிப்பாளர் ஞானவேல், ஒளிப்பதிவாளர் மதி, எடிட்டர் காசி விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது கார்த்தி பேசுகையில், `நான் மகான் அல்ல படத்தின் முதல் பாதி கதையை டைரக்டர் சுசீந்திரன் என்னிடம் சொன்னபோது, சிரித்துக்கொண்டே இருந்தேன். சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேனா? என்று அவரிடம் கேட்டேன். நிச்சயமாக பொருத்தமாக இருப்பீர்கள் என்று சுசீந்திரன் சொன்னார். இந்த படத்துக்காக முதல்முறையாக நான் ஒத்திகை பார்த்தேன். ஒரு வாரம் ஒத்திகை நடந்தது. இதை கதை என்று சொல்வதை விட, ஒரு இளைஞனின் வாழ்க்கை என்று சொன்னால், பொருத்தமாக இருக்கும். ஒரு நடுத்தர குடும்பத்தில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் அந்த இளைஞன். எங்கோ ஒரு மூலையில் நடக்கும் தப்பு, அவன் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது. இதுதான் `நான் மகான் அல்ல' படத்தின் கதை. இந்த படத்தில் இடம்‌பெறும் காதல் காட்சிகளில் நான் ரசித்து நடித்தேன். காஜல் அகர்வால் திறமையான நடிகை. அவருக்கு இப்படம் முக்கியமான படமாக இருக்கும், என்றார்.

பையா படத்தில் தமன்னாவுடன் நடித்த கார்த்தி, தமன்னாவையும் திறமையான நடிகை என்று பாராட்டினார். அதேபோல இப்போது காஜல் அகர்வாலை பாராட்டினார். இதையடுத்து நிருபர்கள் `தமன்னா, காஜல் அகர்வால் ஆகிய இரண்டு பேரில், சிறந்த அழகி யார்?' என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த கார்த்தி, `தமன்னாவை விட காஜல் அகர்வால் உயரமானவர். அவரை விட இவருக்கு கண்கள் பெரியவை' என்றார்.இதக்கு அர்த்தம் தமன்னாவை விட காஜல் அகர்வால் சிறந்தவர் என்பதாகவும் இருக்கலாம். இருக்கலாம் இத கவனியுங்கள்
Readmore...

தமிழ் திரைப்பட வாய்ப்பு இல்லாததால் வருத்தத்தில் பிரியாமணி

0 comments
 
பிரியாமணிக்கு தமிழில் படங்கள் இல்லை. “கண்களால் கைது செய்” படத்தில் அறிமுகமானவர். “அது ஒரு கனாக்காலம்”, “பருத்தி வீரன்”, “மலைக்கோட்டை” “தோட்டா”, “ஆறுமுகம்”, “நினைத்தாலே இனிக்கும்” போன்ற படங்களில் நடித்தார். “பருத்தி வீரன்” சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது.

ஆனாலும் கடந்த ஒரு வருடமாக தமிழில் கதாநாயகி வாய்ப்பு வர வில்லை. “ராவணன்” படத்தில் மட்டும் சிறு வேடத்தில் தலைகாட்டி விட்டு போனார்.

பிரியாமணியை இயக்குனர்களும் தயாரிப்பா ளர்களும் ஒதுக்குகிறார்கள்.

இதுபற்றி பிரியாமணி அளித்த பேட்டி வருமாறு:-

“பருத்தி வீரன்” படத்தில் சிறப்பான நடிப்பை வெளியிட்டேன். அதற்காக தேசிய விருதும் கிடைத்தது. ஆனாலும் எனக்கு தமிழ்ப்பட வாய்ப்புகள் வரவில்லை. நான் ஓரம் கட்டப்பட்டு உள்ளேன்.

தமிழ் பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் என்ன நினைத்து இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று புரிய வில்லை. நான் நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளேன். ஆனாலும் தமிழில் வாய்ப்புகள் வருவதில்லை.

மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. “ராவணன்” படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. மலையாளத்தில் வெளியான “திரக்கதா” படத்தில் எனக்கு விருது கிடைக்க வேண்டியது. சொந்த குரலில் டப்பிங் பேசாததால் அந்த வாய்ப்பை இழந்தேன். தெலுங்கு படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் டப்பிங் பேச முடியவில்லை.

எல்லா நடிகைகளுமே இப்போது கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கி விட்டனர். ஆனால் நான் பிகினி உடையில் நடித்து விட்டேன் என்று எல்லோரும் என்னைத்தான் விமர்சிக்கிறார்கள்.

தெலுங்கில் “துரோணா” என்ற படத்தில் ஒரு கனவு காட்சியில்தான் அப்படி நடித்து இருக்கிறேன். எனது உடல் அமைப்புக்கு கவர்ச்சி உடை அணிவது பொருத்த மாக இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை.

நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியில் நீச்சல் உடையைத்தான் அணிய வேண்டும். சேலை உடுத்திக் கொண்டா குளிப்பார்கள்.

இவ்வாறு பிரியாமணி கூறினார்.
Readmore...
Friday, June 25, 2010

மன்மதன் அம்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களுக்கோ செல்போன்களுக்கோ அனுமதியில்லை

0 comments
 
கமல் - த்ரிஷா முதல் முறையாக ஜோடி சேரும் மன்மதன் அம்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு ப்ரான்ஸ், ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.

படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டிலேயே ஷ§ட் பண்ணப்பட உள்ளது. ஏற்கனவே வேண்டும் மட்டும் டிஸ்கஷன் வைத்து வேண்டும் மட்டும் கதையை செழுமைப்படுத்திய பிறகே விமானம் ஏறினாலும், சில திருத்தங்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்துச் செய்து வருகிறாராம் கே.எஸ்.

வெளிநாடுகளில் படமெடுக்கும்போது சில காட்சிகள் வலைத்தளங்களில் வந்து விடுவதால் ஸ்பாட்டில் ரசிகர்களுக்கோ செல்போன்களுக்கோ அனுமதியில்லை என்று கேஎஸ் கட்டளை விதித்திருப்பதாகவும், படம் வெளியாகும்வரை எந்தக் காட்சியும் கசிந்து விடக்கூடாதென படக்குழுவினருக்கு அன்புக் கட்டளை போட்டுள்ளார்.
Readmore...

கனவுக் கன்னியாகும் கனவிலிருக்கும் அனுஷ்கா

0 comments
 
வேட்டைக்காரன் படம் தமிழில் கனவுக் கன்னி அந்தஸ்தைப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்தார் அனுஷ்கா. அது புஸ்வாணமானதில் ஏமாற்றமடைந்த அனுஷ்காவுக்கு ஹரியின் சிங்கம் நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

அப்துல் கலாம் பாணியில் தமிழ்த் திரையுலகின் கனவுக் கன்னியாகும் கனவிலிருக்கும் அனுஷ்கா, தமிழின் முன்னணி வரிசையில் இடம் பிடித்திருக்கும் தமன்னா, ஸ்ரேயா போன்றோரையும் அவர்களது படங்களையும் உற்றுக் கவனித்து வருகிறார்.

யாராவது கனவுக் கன்னியாவது எப்படி என்று டியூசன் எடுத்தால் பீஸ் கட்டி சேர்ந்துவிடுவார் என்பது போல ஆர்வம் காட்டும் இந்த நாயகி, அதன் முதற்கட்டமாக சென்னைக்கு குடிவந்துவிடத் திட்டமிட்டிருக்கிறார்.
Readmore...
Thursday, June 24, 2010

Naan Mahan Alla Movie image Gallery

0 comments
 


























Readmore...