டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியிருக்கும் படம் ராவணா. இந்தி படத்தில் அபிஷேக் பச்சனும், தமிழ் படத்தில் விக்ரமும் நாயகனாக நடித்துள்ளார்கள். நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். ப்ரியாமணியும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படத்தின் சூட்டிங் முடிந்து, டிரைலரும் வெளியாகி விட்ட நிலையில் கதை ராமாயணத்தின் தழுவலா, அல்லது வேறு மாதிரியானதா? என்ற கேள்விக்கு மட்டும் விடை கிடைக்காமல் இருந்தது.
இப்போது ஒருவழியாக ராவணா படத்தின் கதை கசியத் தொடங்கியிருக்கிறது. ராவணா படம் ராமாயணத்தின் தழுவல் என்றெல்லாம் கூறப்பட்டாலும், அதை நேரடியாக அர்த்தம் பண்ணிக் கொள்ள முடியாது. ஏனென்றால் கதை அப்படி வித்தியாசமாக செல்கிறது. கதைப்படி போலீஸ் தேடுகிற குற்றவாளிதான் ஹீரோ விக்ரம். அவருக்கு வைக்கப்படும் குறியில் அவரது தங்கை ப்ரியாமணி போட்டுத் தள்ளப்படுகிறார். அந்த வெறித்தனமான கொலையை அரங்கேற்றியது போலீஸ் அதிகாரி பிருத்விராஜ். இதனால் கோபம் கொள்ளும் விக்ரம், ப்ருத்விராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயை கடத்திக் கொண்டு காட்டுக்குள் பதுங்குகிறார். அவரிடம் இருந்து தப்பித்து, காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்து ஒருவழியாக போலீஸ் கைக்கு கிடைக்காறார் ஐஸ். மனைவி கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட வேண்டிய பிருத்விராஜ், ஐஸ்வர்யாவை சந்தேகப்படுகிறார். அவனும், நீயும் ஒண்ணா காட்டுக்குள்ள சுத்துனீங்க. நீ சுத்தமா இருக்கியான்னு தெரியணும்... என்று கேள்வி கேட்டு டார்ச்சர் செய்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் ஐஸ்வர்யா ராய் எடுக்கும் முடிவுதான் கதையின் க்ளைமாக்ஸ்.
Saturday, May 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
உண்மைதான் ராவணா படம் ராமாய கதை தான்