பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். இருவரையும் பிரிக்க பிரபுதேவா மனைவி ரம்லத் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன.
நயன்தாராவை அடிப்பேன் என்று மிரட்டினார். கணவரை விட்டு விலகும்படி செல்போனில் எஸ்.எம்.எஸ்.களும் தொடர்ந்து அனுப்பினார். பிரபு தேவாவிடமும் காதலை முறிக்கும்படி வற்புறுத்தினார். எதுவும் பலிக்கவில்லை. மாறாக நெருக்கத்தை இருவரும் தீவிரமாக்கினர்.
பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்றார்கள். ஐதராபாத்தில் நடந்த படவிழாவுக்கு கைகோர்த்தப்படி வந்தனர். சென்னையில் ஒரே மேடையில் சேர்ந்து நடனம் ஆடி தொடர்பை வெளிப்படுத்தினார்கள். ரம்லத் சோர்வாகிவிட்டார்.
அடுத்தக்கட்டமாக இருவரும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். தற்போது பாதி நாட்கள் நயன்தாராவுடனும், மீதி நாட்கள் அண்ணா நகரில் உள்ள வீட்டில் ரம்லத்துடன் பிரபு தேவா தங்குகிறார். நயன்தாராவுடனான சந்திப்புகள் நட்சத்திர ஓட்டல்களிலேயே நடக்கிறது.
அவருக்கு சென்னையில் வீடு பார்த்து தங்க வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக புரோக்கர்கள் மூலம் வீடு தேடிவருகிறார். ஐதராபாத்திலும் வீடு தேடுகிறார்.
பிரபுதேவாவுக்காக மதம்மாற நயன்தாரா முடிவு செய்துள்ளார். இவரது சொந்த பெயர் டயானா மரியம் குரியன். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். சினிமாவுக்காக நயன்தாரா என பெயர் வைத்துக் கொண்டார்.
பிரபுதேவா மனைவி ரம்லத் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். திருமணத்துக்கு பிறகு அவர் இந்து மதத்துக்கு மாறினார். தனது பெயரையும் லதா என மாற்றிக்கொண்டார்.
அதுபோல் நயன்தாராவும் இந்து மதத்துக்கு மாறி பிரபுதேவாவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். இப்போதே படப்பிடிப்புகளின்போது அந்தந்த பகுதிகளில் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபுதேவா, மதம் மாறவேண்டாம் என்று கூறினாராம். ஆனால் நயன்தாரா கேட்கவில்லை. காதலின் ஆழத்தை வெளிப்படுத்த மதம் மாறுவதில் உறுதியாக இருக்கிறாராம்.
Friday, May 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)