Thursday, May 20, 2010
4 மணி நேர நடிப்பிற்கு 40 லட்சம் வாங்கிய நடிகை ஜெனீலியா
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமான ஜெனிலியா விஜய் ஜோடியாக சச்சின் படத்தில் நடித்தார். சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது உத்தமபுத்திரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தி தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சம்பளம் கோடியை தாண்டியுள்ளதாம். சமீபத்தில் ஒரு விளம்பர படத்தில் 4 மணி நேரம் நடிக்க ரூ.40 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெனிலியா நடிக்கும் ஆரஞ்ச் என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. அங்கு வாட்ச் கம்பெனியொன்றின் நிர்வாகிகள் ஜெனிலியாவை அணுகி தங்கள் நிறுவன விளம்பர படத்தில் நடிக்க அழைத்தனர். 4 மாதங்களுக்கு படங்கள் கைவசம் இருப்பதால் நடிக்க முடியாது என்று மறுத்தார். இரண்டு மணிநேரம் மட்டும் நடித்தால் போதும் என்று வாட்ச் கம்பெனிக்காரர்கள் வற்புறுத்தினர். இயக்குனரிடம் அனுமதி பெற்று இரண்டு மணி நேரம் நடித்து கொடுத்தார். மேலும் 2 மணி நேரம் கூடுதலாக நடிக்கும்படி வாட்ச் நிறுவனம் கேட்டது, அதை ஏற்றுக்கொண்டு நடித்து கொடுத்தார். இந்த 4 மணி நேரத்துக்கு ஜெனிலியா வாங்கிய சம்பளம் ரூ.40 லட்சமாம். அப்போ! ஜெனிலியா காட்டில் நல்ல மழைன்னு சொல்லுங்க!
Subscribe to:
Post Comments (Atom)