Thursday, May 20, 2010
ஆதிக்கம் செலுத்தப் போறேன் : மேகா நாயர்
தொடக்கம் படத்தில் நாயகிகளில் ஒருவராக வந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா நாயர். அந்த படம் ரசிகர்களால் கவனிக்கப்படாவிட்டாலும், அடுத்து நடித்த பசுபதி மே.பா.ராசக்காபாளையத்தில் முண்டு கட்டி வந்து ரசிகர்களை திண்டாட வைத்த பெருமையைப் பெற்றது இந்த கேரளத்து வண்ணத்துப்பூச்சி. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று வெட்டி பந்தா காட்டும் நாயகிகளுக்கு மத்தியில் நல்ல டைரக்டரை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்ற புதிய கோணத்தில் பேசுகிறார் மேகா. ஒரு டைரக்டர்தான் தனது கதைக்கு பொருத்தமான நடிகை யார் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். நடிகையை தேர்ந்தெடுத்து விட்டு கதையை யோசிக்கக் கூடாது என்று சொல்லும் மேகா, தற்போது ஆதிக்கம் படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஆதிக்கம் படத்தின் டைரக்டர் அனிஷ் 23 வயது இளைஞர். எந்த டைரக்டரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் இளம் வயதிலேயே படம் இயக்கி வரும் அனிஷ் பற்றி மேகா கூறுகையில், இது இளைஞர்கள் காலம், இளைஞர்களின் உணர்வுகள் அனுபவஸ்தர்களை விட இளைஞர்களுக்குத்தான் நன்றாக தெரியும். டைரக்டர் அனிஷின் ஆதிக்கம் படத்தின் கதையும் இளைய சமுதாயத்தைப் பற்றியது. இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள் தவறான வழியை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள், காதல் மொழி பேசும் இளைஞன் கத்தி தூக்குவது எதனால்... என்பது போன்ற பல உணர்வுகளை பிரதிபலிக்கும் ஆதிக்கம்
Subscribe to:
Post Comments (Atom)