நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள புதிய படமான வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கப் போகிறாராம். தற்போது தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடித்து வரும் ஹன்சிகா, அதனைத் தொடர்ந்து விஜய் ஜோடியாக நடிக்கிறார். பாலிவுட்டிலிருந்து டோலிவுட்டிற்கு இடம் பெயர்ந்த நாயகி ஹன்சிகா. குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்து இப்போது நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வந்த தேவதையான ஹன்சிகா, தமிழிலும் ஜெயிப்பேன் என்று கூறியிருக்கிறார். இவர் பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் இச் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். அவர் புக் ஆகியிருக்கும் எந்த படமும் இன்னமும் வெளியாகாத நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் மட்டும் குவிந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, May 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)