Pages

Thursday, May 20, 2010

பிளஸ் 2 ல நம்ம கோலிவுட் நட்சத்திரங்களின் மதிப்பெண்கள்

0 comments
 
+2 ரிசல்ட் வந்தாச்சு...மாணவர்கள் ஆளாளுக்கு பொறியியல், மருத்துவம்னு அலைந்து கொண்டிருக்கிறார்கள். இனிமேல் தான் இவர்கள் சாதிக்கணும். ஏற்கனவே சாதித்துவிட்ட சினிமா பிரமுகர்கள் +2 வில் என்ன மார்க் எடுத்திருப்பாங்க? அவர்களுடைய மதிப்பெண் பட்டியலும் இந்த சீஸனுக்கு வெளிவந்தாச்சு. நீங்களும் தான் தெரிஞ்சுகங்க...

முதல்ல லேடிஸ் பர்ஸ்ட்... ஓகே.

அசின் - 1116 (இம்மா மார்க் எடுத்துட்டு ஏம்மா எங்களை வதைக்க வந்த...)

த்ரிஷா - 1072 (ஏதோ கணக்கு மிஸ்ஸாகி த்தான் நீங்களெல்லாம் கோடம்பாக்கம் வந்துட்டீங்க போலிருக்கு)

காயத்திரி - 1090 - தடகள வீராங்கனை- ( ஒடும்போதும் படிச்சீங்களோ!)

இப்போ ஆண்கள்...

சூர்யா - 872 (ஆஹா...எங்க ரேஞ்சுக்கு இருக்கீங்களே. ரொம்ப சந்தோஷம்)

இயக்குநர் பாலா - 555 (அதென்னங்க த்ரிபிள் பைவ்...படிக்கும் போதே கதைக்காக ஜன்னலில் பராக்கு பார்ப்பீங்களோ)

இயக்குநர் பாண்டிராஜ் - 796 (ஏதோ பரவாயில்லை. சரியான நேரத்துல கலைத்துறை பக்கம் வந்துட்டீங்க)

இசையமைப்பளார் விஜய் ஆண்டனி - 957 ( ஏதோ சாதிக்கனும்கற வெறியிலதான் இசைப் பக்கம் வந்திருக்கீங்க...சரியா?)

ஆர்யா - 1098 ( இதாங்க நேரம்ங்கறது... இம்புட்டு எடுத்துட்டு த்ரிபிள் பைவ் பார்ட்டி சொல்ற மாதிரிதான் நடிக்க வேண்டி இருக்கு பார்த்தீங்களா?)

அம்புட்டுதாங்க.

மற்றவர்கள் மார்க் லிஸ்ட்டை முடிஞ்சா வருங்காலத்தில் போடறோம்.

Leave a Reply