Pages

Thursday, May 20, 2010

முதல் முறையாக வில்லியாக நடிக்கிறார் கவர்ச்சிப்புயல் நமிதா

0 comments
 
முதல் முறையாக வில்லியாக நடிக்கிறார் கவர்ச்சிப்புயல் நமிதா. வந்தமா கவர்ச்சி உடையில் கலக்கினோமா என்றிருந்த நமிதா திடீரென்று திசை மாற காரணம், தமிழக முதல்வர் கருணாநிதிதான்! கருணாநிதியின் வசனத்தில் சுரேஷ் கிருஷ்ணா இளைஞன் படத்தை இயக்கி வருகிறார். மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாராகி வருகிறது. பா.விஜய் கதாநாயகனாக நடிக்க ரம்யா நம்பீஸன் கதாநாயகியாக நடிக்கிறார். பா.விஜய்யின் அம்மாவாக குஷ்பு நடிக்கிறார். இந்தப் படத்தில் வில்லி கதாபாத்திரம் ஒன்று வருகிறது. இதில் நடிக்க கேட்டதும் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார் நமிதா. கருணாநிதியின் வசனத்தில் தயாராகும் படம் என்பதாலும், அப்படியொரு படத்தில் நடிப்பது பெரும் பாக்கியம் என்பதாலும் உடனே கால்ஷீட் கொடுத்ததாக சொல்லி பரவசமடைகிறார் நமிதா. கலைஞர் கதையில வில்லின்னா என்ன சும்மாவா?

Leave a Reply