சினிமா சூட்டிங்கில் பங்கேற்க வேலூர் சென்ற அசினை பார்ப்பதற்கு முண்டியடித்த ரசிகர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். விஜய் - அசின் ஜோடி நடிக்கும் புதிய படத்தின் சூட்டிங் தற்போது வேலூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக விஜய், அசின் மற்றும் படக்குழுவினர் வேலூரில் தங்கியிருக்கிறார்கள். சத்துவாச்சாரி பகுதியில் உள்ள நவீன உள் விளையாட்டரங்கில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. விஜய் - அசின் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவர்களை பார்ப்பதற்காக சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தனர். கூட்டம் அதிகமானதால் படப்பிடிப்பு குழுவினர் ரசிகர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனாலும் விஜய்யையும், அசினையும் பார்த்து விட்டுத்தான் இங்கிருந்து புறப்படுவோம் என்று கூறி அங்கேயே இருந்தனர். இதையடுத்து விஜய் - அசின இருவரும் வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையசைத்தனர். ரசிகர்கள் உற்சாக மிகுதியால் அவர்களை நெருங்க முண்டியடித்தனர். விஜய்க்கு கை கொடுப்பதற்காக பலர் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லத்தியை சுழற்றி லேசான தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர். தற்போது பிரச்னை ஏற்படாமல் தடுப்பதற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tuesday, May 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)