விஜய்க்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் சில அதிரடி தீர்மானங்கள் எடுத்து அதை பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் தெரிவிப்பதாக இருந்ததும், கடைசி நேரத்தில் எஸ்.ஏ.சி தலையிட்டு வாங்க பேசிக்கலாம் என்று அழைத்ததையும் நாம் முன்பே வெளியிட்டிருந்தோம். சுடச் சுட நடந்த அந்த பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லையாம். அதனால், முன்பே ஏற்பாடு செய்திருந்த பிரஸ்மீட்டை மீண்டும் நடத்த முடிவு செய்திருக்கிறது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம். தங்களுக்கு ஏற்பட்ட நஷ்ட ஈடாக ஆறு கோடி ரூபாய் தர வேண்டும் என்கிறார்களாம் இவர்கள். இதற்கெல்லாம் விஜய் ஒப்புக் கொள்வாரா என்பது ஒரு புறம் இருக்கட்டும். வேறொரு நல்ல செய்தி. காவல்காரன் படத்தை முதல் பிரதி அடிப்படையில் வாங்கியிருக்கிறாராம் விஜய். தனது படங்களால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் சலுகை விலையில் படத்தை தரவே இப்படி ஒரு முடிவெடுத்தார் என்கிறார்கள் திரையுலக வட்டாரங்களில்! பாதிக்கப்பட்டவங்க நெஞ்சுல பாலை வார்த்துட்டீங்களே....
Saturday, May 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)