Pages

Saturday, May 29, 2010

ரெண்டு படத்துல தொடர்து புக் செய்தால் சம்பளத்தை குறைக்க தமன்னா முடிவு

0 comments
 
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகியுள்ளார் தமன்னா. அயன் படத்தில் சூர்யாவுடனும், பையா படத்தில் கார்த்தியுடனும், சுறா படத்தில் விஜய்யுடனும் நடித்ததின் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். தில்லாலங்கடி, சிறுத்தை, அருவா போன்ற படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார். படங்கள் குவிவதால் சம்பளத்தை பெருமளவு உயர்த்தியுள்ளார். ஆரம்பத்தில் ரூ. 25 லட்சம் சம்பளம் வாங்கிய அவர் இப்போது ரூ. 1-1 2 கோடி வரை கேட்கிறார் என்கின்றனர். பெரிய நடிகர்களும் தமன்னாவை ஜோடியாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வளர்ச்சியை அப்படியே தக்க வைத்துக் கொள்ள தமன்னா விரும்புகிறார். இதற்காக சம்பளத்தில் புதிய பேக்கேஜ் முறையை அறிமுகம் செய்துள்ளார். ஒரே கம்பெனி தொடர்ந்து இரு படங்களில் நடிக்க வாய்ப்பு தந்தால் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளார். தெலுங்கு நடிகர் அல்லு அரவிந்தின் படக்கம்பெனி சொந்தமாக இரு படங்கள் தயாரிக்கிறது. அதில் ஒரு படத்தில் தமன்னாவை நாயகியாக ஒப்பந்தம் செய்தனர். இன்னொரு படத்திலும் என்னையே நடிக்க வைத்தால் சம்பளத்தில் தள்ளுபடி செய்வதாக கூறினார். இதையடுத்து இரு படத்திலும் தமன்னாவை ஒப்பந்தம் செய்தனர். இதையடுத்து சம்பளத்தில் பல லட்சங்கள் தள்ளுபடி செய்துள்ளார். தமிழிலும் இது போல் ஒரே கம்பெனி இரு படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் சம்பளத்தில் தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளார். பொழைக்கத்தெரிஞ்ச புள்ள!

Leave a Reply